இன்று(10.10.2025) தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பசுமை தமிழகம் திட்டத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி திரு. சுப்பிரமணிய சிவா அவர்களின் நூற்றாண்டு வருடம் மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய நினைவாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி கிராமத்தில் ஆல மரம் நடப்பட்டது..
Friday, October 10, 2025
ஜெய்ப்பூர் தேசிய ஆசிரியர்கள் மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள் OCT 2025!!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
ABRSM ராஜஸ்தான்
அகிலபாரத ஆசிரியர்கள் மாநாட்டில் கொண்டு வந்த
ஆசிரியர் நலன் சார்ந்த
தீர்மானம் 3 - ன் மொழிபெயர்ப்பு
தீர்மானம் – 3
கல்வி சார்ந்த மற்றும் ஆசிரியர்களின் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
கல்வி மற்றும் ஆசிரியர்களின் பல பிரச்சனைகள் அரசின் அலட்சியமும் தீர்மானமின்மையாலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மஹாசங்கத்தின் இந்த பொதுக்குழு, மத்திய மற்றும் மாநில அரசுகள் கீழ்க்கண்ட பிரச்சனைகளை தாமதமின்றி, உணர்வுபூர்வமான அணுகுமுறையுடன் தீர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
1. தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதன் செயல்பாடு, நிலைமைகள் மற்றும் காணப்பட்ட சவால்கள் குறித்த விரிவான ஆய்வு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையின் அனைத்து நிலைகளிலும் உள்ள காலியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்பட வேண்டும்; தற்காலிக நியமனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
3. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும்; அதில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
4. UGC 2025 வரைவு விதிமுறைகள் ABRSM வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்படவோ அல்லது திரும்பப்பெறப்படவோ வேண்டும்.
5. ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு கோடிக்கணக்கான ஆசிரியர்களை பாதித்துள்ளது; 2010க்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் சேவை மற்றும் பதவி உயர்வை பாதுகாக்க உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.
6. 2004 ஜனவரி 1க்கு முன் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் அனைத்து ஆசிரியர்களுக்கும் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.
7. அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களின் ஓய்வூதிய வயது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 65 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
8. அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒழுங்காகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
9. உயர்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு திட்ட நன்மைகள் காலவரையறைக்குள் வழங்கப்பட வேண்டும்.
10. பணியில் உள்ள ஆசிரியர்கள் Ph.D. பாடநெறி பணியில் இருந்து விலக்கு பெறவோ அல்லது அதற்கான ஊதியத்துடன் விடுமுறை / ஆன்லைன் வசதி வழங்கப்படவோ வேண்டும்.
11. உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கான ஊதியப் பரிவர்த்தனைகள் பொருளாதாரத் துறை (Treasury System) மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
12. பள்ளி மற்றும் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு இலவச சுகாதார வசதி வழங்கப்பட்டு, அதற்கான சரியான செயல்பாடு உறுதி செய்யப்பட வேண்டும்.
13. UGC விதிமுறை 2018 நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்பட வேண்டும்; அதில் உள்ள முரண்பாடுகளை நீக்குவதற்கான "Anomaly Redressal Committee" அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும்.
14. நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இதர இணைந்த பணியாளர்களின் சேவை நிபந்தனைகள் ஆசிரியர்களுடன் சமமாக இருக்க வேண்டும்.
15. ஆசிரியர்கள் கல்விசார் பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும்; மதிய உணவு திட்டம் போன்ற நிர்வாகப் பணிகளில் அவர்களைச் சேர்க்கக் கூடாது.
16. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது பட்ஜெட்டில் முறையே 10% மற்றும் 30% கல்விக்காக ஒதுக்க வேண்டும், இதனால் போதுமான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் (புத்தகங்கள், கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை) வழங்கப்படலாம்.
17. கல்வியின் தன்னாட்சி நாடு முழுவதும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; கல்வி தொடர்பான முடிவுகளில் ஆசிரியர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும், அரசியல் மற்றும் நிர்வாக தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
18. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகள் நடைமுறைப்படுத்தத்தக்கவாறு ஒரே மாதிரியாகவும், தேவையான வளங்களுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
19. கல்வியின் வணிகமயமாதல் மற்றும் தனியார்மயமாதலை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
20. கல்லூரி முதல்வரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்படாமல், ஓய்வு பெறும் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
21. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சரியான ஆசிரியர்–மாணவர் விகிதம் உறுதி செய்யப்பட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். உயர் கல்வியில் UGC மற்றும் NEP விதிகளின்படி ஆசிரியர்–மாணவர் விகிதம் பின்பற்றப்பட வேண்டும்.
22. சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் நியமனம், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
Wednesday, October 8, 2025
Tuesday, October 7, 2025
TET தேர்வு : மத்திய அரசுக்கு கோரிக்கை!!!
RTE சட்டம் வருவதற்கு முன் நியமன ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும்
ஜெய்ப்பூர் மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜம் டோலியில் ABRSM (அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு) சார்பில் அக்டோபர் 5,6,7 தேதிகளில் அகில இந்திய கல்வி மாநாடு நடந்தது ராஜஸ்தான் மாநில முதல்வர் மாண்புமிகு பஜன்லால் சர்மா அவர்கள் மாநாட்டை துவங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்கள் மாண்புமிகு துணை முதல்வர்கள் , மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஆசிரியர் சங்கங்களைச்சார்ந்த 4000 நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஆசிரியரே சமுதாயத்திற்கு வழிகாட்டி, அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்குவதில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்கள் , தேச முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் பங்கு ,பல்வேறு மாநிலங்களில் கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 60 பேர் கலந்து கொண்டனர்
இம்மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி அவர்கள் சமீபபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நாடு முழுவதும் சுமார் 15 இலட்சம் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் ,20-30 ஆண்டுகளுக்கு முன் நியமனம் பெற்ற இவர்கள் TET தேர்வு எழுத நிர்ப்பந்தம் செய்வதால் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி RTE சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பின் பணி நியமனம் பெற்று TET தேர்ச்சி பெறாமல் உள்ளவர்கள் எழுத வேண்டிய TET தேர்வு தவறான புரிதலால் அனைவரும் எழுத வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி NCTE மற்றும் மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது உரிய சட்ட திருத்தம் செய்து RTE சட்டம் அந்தந்த மாநிலங்களில் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும்
தமிழகத்தில் எமிஸ் ,யுடைஸ் பிளஸ் என பல்வேறு புள்ளிவிபரங்கள் பதிவேற்றவே ஆசிரியர்கள் நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது இதனால் தமிழகத்தின் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் மேலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30 க்குள் பெற்று அக்டோபரில் அறிவிப்பதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக இடைக்கால அறிக்கை மட்டுமே பெற்றது அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்கிறது எனவும் தெரிவித்தார் இதை பாரதப் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அகில இந்திய அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் TET பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 4000 ஆசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
Saturday, September 20, 2025
கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்!!!
வணக்கம். நேற்று 18.9.2025 வியாழன் அன்று TET தேர்வுக்குத் தளர்வு கோரி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அனுப்பும் நிகழ்வு நடந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஆசிரியர் ங்க மாவட்டத் தலைவர் Dr.M.ஜெயபோஸ், மாவட்டச் செயலாளர் திரு.காசி. சாந்தகுமார், பொருளாளர் திரு. உதயகுமார், சேவைப் பிரிவுச் செயலாளர் திரு.ராஜன் பாபு, ஊடகச் செயலாளர் திரு. சிவகுமார், நாகர்கோவில் கல்வி மாவட்டத் தலைவர் திரு. ஜெயராஜ துரை, செயலாளர் திரு. ஹரிஹரன், ஊடகச் செயலாளர் திரு. அருள் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Friday, September 19, 2025
திருச்சி மாவட்ட செய்திகள்!!!
Nagapattinam District News!!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் தேசிய அமைப்பு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ஆசிரியர் அமைப்பான ABRSM அமைப்பு நாடு முழுவதும் 800 மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பு விவகாரத்தில் மேதகு பிரதமர் அவர்கள் பணிபுரியும் ஆசிரியர்களை கண்ணியமாக நடத்தவும் சீரிய வழியை காட்ட வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியாக பிரதமருக்கு வேண்டுகோள். நாகப்பட்டினம் மாவட்ட நிகழ்வு.
Thursday, September 18, 2025
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!
இன்று தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை கடிதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்கள் மூலமாக பரிந்துரை செய்ய கடிதம் அளிக்கப்பட்டது .மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் மாவட்டத் தலைவர் திரு. B.S. இளன்பருதி. மாவட்டச் செயலாளர் திரு. ஆறுமுகம் மற்றும் திரு. நாகரத்தினம் ஆகியோர் பரிந்துரை கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்!!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
சார்பில் TET விலக்கு வேண்டி
பாரத பிரதமர் அவர்களுக்கு
கடிதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கோட்ட பொறுப்பாளர்
திரு .N.கேசவன் அவர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.K.சுந்தரகோபால் மற்றும் S. செல்வம்.
Thursday, April 17, 2025
சென்னை மாவட்ட செய்திகள்!!!
Wednesday, April 16, 2025
SSLC விடைத்தாள் திருத்தும் முகாம் - கோரிக்கை கடிதம் !!!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், மாணவர் நலன் கருதி ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்கள் மட்டும் வழங்கக்கோரி தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம்......
தருமபுரி மாவட்ட செய்திகள்!!!
இன்று (16.04.2025) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலர்கள் ஆகியவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கி மகிழ்ந்தோம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டோம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்....
Thursday, April 3, 2025
FATO - GEO வில் தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு!!!
CLICK HERE TO VIEW PAPER NEWS
அனைவருக்கும் வணக்கம். இன்று (03/04/2025) போட்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர வாழ்வாதார 10 அம்ச கோரிக்கைகளை மீட்டெடுக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் 36+ மாவட்டங்களில் மாநில , கோட்ட , மாவட்ட , வட்டார பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதிக மாவட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஆசிரியர் சங்கத்தின் கரங்களை வலுப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்...
மாநில மையம்
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு
Monday, February 24, 2025
நமது கோரிக்கைகள் - CLICK HERE
இன்று (24.02.2025) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை தமிழ்நாடு அரசு சார்பில் நான்கு அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. பேச்சுவார்த்தையில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில துணைத் தலைவர் திரு முருகன் கலந்து கொண்டார் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அமிர்தகுமார் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முன்பு இருந்தது போல் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை எதுவும் ஏற்படாது என்பதையும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் .ஊக்க ஊதிய உயர்வை முன்பு இருந்தது போல் வழங்கவேண்டும் CPS திட்டத்தை ரத்து செய்யும் வரை அவர்களுக்கு பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கலந்து பேசி தீர்வுகள் காணப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Sunday, February 23, 2025
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!
இன்று (23-02-2025) திண்டுக்கல்லில். GTN கலைக் கல்லூரி எதிர்ப்புறம் அமைந்துள்ள GS நகர் செல்வ விநாயகர் திருக்கோவிலில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக தேர்வு எழுதக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர் நலனுக்காகவும் ஆசிரியர்கள் நலனுக்காகவும். மேதா ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் திரு இளன் பருதி வரவேற்பு வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவர் டாக்டர். ராம்குமார் , பேராசிரியர் டாக்டர். ராமச்சந்திரன் ,சமூக ஆர்வலர் திரு. கோபாலகிருஷ்ணன் ,ஜெய்ஹிந்த் அகாடமி தலைவர் திரு. சந்தானம் ஆகியோர் மாணவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான உணவு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார் .நிகழ்ச்சியை மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் ஏற்பாடு செய்தார் .































