Saturday, August 9, 2025

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக இன்று (09.08.25) மாலை 4 மணி அளவில் குரு வணக்கம் நிகழ்ச்சி சரஸ்வதி துதியுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. 

விழாவில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் முனைவர். வே.பரமசிவம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.கா. கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையில் மாநிலத் தலைவர் திரு.ம.கோ. திரிலோக சந்திரன் அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.

அப்பொழுது தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

 அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பெரியபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர். சே.ஆ. தாமோதரன் மற்றும் பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர். மு. நாகலிங்கம் அவர்களால் குரு வணக்கம் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

அதன் பின்னர் விடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் கணித பாட முதுநிலை ஆசிரியர் திரு.ந. ராமச்சந்திரன் அவர்கள் குரு வணக்கத்தின் சிறப்புகளைப் பற்றி பேருரை ஆற்றினார்.

அதைத்தொடர்ந்து பணி நிறைவுப் பெற்ற ஆசிரியர்களைப் பற்றிய விவரங்களை கோட்டச் செயலாளர் திரு.தி. நீலமேகன் அவர்கள் வழங்கிட

ஒவ்வொரு ஆசிரியருக்கும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

  பணி நிறைவு பெற்று கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்களின் ஏற்புரையை வழங்கினார்கள்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

விழாவிற்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.





















No comments:

Post a Comment