Wednesday, June 3, 2026
Monday, June 1, 2026
Sunday, May 31, 2026
Saturday, May 30, 2026
TET ISSUE - ABRSM PRESS RELEASE!!!
Tamil version
Thursday, May 28, 2026
TET ISSUE - Our Appeal!!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் நேற்று (27-5-26) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்திக்க சென்றிருந்தோம்.
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஆய்வுக்கூட்டங்கள் இருந்ததால் மூன்று மணி நேர காத்திருப்புக்கு பின் சந்தித்தோம்.
அரசுப்பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தகுதித் தேர்வுத்தேர்வு தேர்ச்சி மதிப்பெண் சார்ந்து பேசினோம். பள்ளிக்கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வழங்கினோம். ஓய்வின்றி தொடர் நிகழ்ச்சிகள் இருந்தபோதும் கனிவுடன் கேட்ட அமைச்சர் தற்போது தான் பதவி ஏற்று 15 நாட்கள் தான் ஆன நிலையில் இவை குறித்து பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்களை சந்தித்து கூறுங்கள் அவர்கள் மூலம் கருத்துருக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து விளக்கினோம்.
ஏற்கனவே அரசுப்பணியில் முழுமையான கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகள் மூலம் நியமனம் பெற்று பணியாற்றி வருகின்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அனைவருக்கும் சமமான மதிப்பெண் நிர்ணயம் செய்வதே சரியாக இருக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் சொல்லொணா மன உளைச்சலில் ஆசிரியர்கள்/பெண் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதை எடுத்துரைத்தோம் உங்கள் கோரிக்கை நியாயமானது என்பதை இயக்குநர் புரிந்து கொண்டார்.
பீகார் மாநிலத்தில் அனைத்து பெண் ஆசிரியர்களுக்கும் , PWD/SC/ST பிரிவினருக்கு 60 மதிப்பெண் OBC -67.5 மதிப்பெண் ,OC - 75 மதிப்பெண் என அரசாணை வெளியிட்டு அதன் பின்னர் தேர்வு நடத்தியதால் அங்கு பெரும்பான்மை ஆசிரியர்கள் தேர்வு தேர்ச்சி பெற்றதை சுட்டிக்காட்டினோம் இதே போல் நடைமுறை உத்தரப்பிரதேச மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருவதையும் தற்போது மேற்கு வங்க அரசு வெளியிட்ட அரசாணையினையும் மதிப்பு மிகு தொடக்கக் கல்வி இயக்குனர் பார்வைக்கு கொண்டு சென்றோம் இது குறித்து அந்தந்த மாநில அரசு கல்வித்துறை செயலாளர் களுடன் விவாதித்து வழி வகைகளை கண்டறிய கேட்டுக் கொண்டோம்.
உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு விசாரணை விவாதத்தின் போது தேர்ச்சி பெற நான்கு ஆண்டுகள் அவகாசம் கேட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் பேசியதற்கு வருத்தத்தை பதிவு செய்தோம்.
மத்திய கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திரா பிரதான் அவர்களுடனான சந்திப்பு விபரங்களையும் அவர்களிடம் தெரிவித்தோம்
அனைத்து விசயங்களையும் கனிவுடன் கேட்ட மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து தெரிவிப்பதாக தெரிவித்தார்
நிச்சயமாக நல்ல முடிவுகள் ஏற்படும் என நம்புகிறோம்
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் பொதுச் செயலாளர் கந்தசாமி துணைத் தலைவர்கள் முருகன் விஜய் மற்றும் இணைச் செயலாளர் ராகவன்,நீலமேகம் தலைமை நிலைய செயலாளர் ராமச்சந்திர குமார் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மு.கந்தசாமி,
பொதுச் செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
7373803777
Wednesday, May 27, 2026
மாணவர்கள் - ஆசிரியர்கள் நலன் சார்ந்த சந்திப்பு!!!
தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பள்ளிக்கல்வி இயக்கக அதிகாரிகளுடன் சந்திப்பு!!!
நாள் 27-5-26
தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் இன்று (27-5-26) மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ராஜ் மோகன், மாண்புமிகு பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சம்பத்குமார், மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு CTR நிர்மல் குமார் ஆகியோரையும் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் திரு நரேஷ் ஆகியோரையும் சந்தித்து ஆசிரியர் அரசு ஊழியர் மாணவர் நலம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வந்தோம்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ராஜமோகன் அவர்களுடனான சந்திப்பின்போது போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் தனது பதவி ஏற்பு விழாவில் அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தோம் மாணவர் நலன் சார்ந்து காலை உணவில் சிறு தானியங்களை சேர்த்து வழங்குதல், பள்ளி திறப்பின் போதிருந்தே தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்தல், TET தகுதித்தேர்வில் ஏற்கனவே அரசுப்பணியில் உரிய ஒதுக்கீட்டு முறையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் அனைவருக்கும் சமமாக வைத்தல் அல்லது OC பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு , மிக விரைவில் போட்டித்தேர்வு மூலம் அல்லது சென்ற போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றோரைக்கொண்டு, நிரந்தரப்பணி இடத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்தல், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் தேர்ச்சி அடைய 75% வருகையை கட்டாயமாக்குதல், DATA சேகரிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து கற்பித்தல் பணி மட்டும் வழங்குதல், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் குறித்து பேசினோம். அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது, பள்ளிகளின் கான்கிரீட் மேல் தளங்களில், நம் பள்ளியிலேயே, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டினோம்.
மாண்புமிகு பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது கள்ளர் பள்ளிகளில் பணி மாறுதல் கலந்தாய்வு உடன் நடத்துதல், அலகு விட்டு அலகு மாற தடைஇன்மை சான்று வழங்கவேண்டுதல், முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஒன்பதாக உயர்த்துதல், அனைத்து ஆசிரியர் பணி நியமனங்களும் துறை வாரியாக இல்லாமல் ஒரே நாளில் ஒரே தளத்தில் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
பள்ளிக்கல்வி துறை அரசு துணைச்செயலாளருடனான சந்திப்பின் போது கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் தாளவாடி ஒன்றியம் உள்ளிட்ட ஏழு கல்வி மாவட்டங்களில் கன்னட மொழியில் பயின்று பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சான்றிதழ் மதிப்பீடு சார்ந்து ஏற்கனவே முன் நிகழ்வுகள் இருந்தும் விதித்தளர்வாணை வழங்காமல் தொடர் தாமதம் செய்வது ஆசிரியர்களை அலைக்கழிப்பது ஆகியவை துறையின் நற்பெயருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை பதிவு செய்தோம்
அமைச்சர் பெருமக்களுடனான சந்திப்பு விபரங்களை மதிப்பு மிகு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மதிப்பு மிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டோம்
தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பின் போது,
SMC மூலம் ஜூன் மாதத்திலேயே காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட தகவலையும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட முயற்சிகள் நடைபெற்று வருவதையும் அறிந்தோம்.
TET தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறித்து பீகார் மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசவும், அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீடு முறைப் படி நியமனம் பெற்றுள்ளதால் OC பிரிவினர் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான தேர்ச்சி மதிப்பெண் வைத்தல், பணிக்காலத்திற்கு என சிறப்பு மதிப்பெண் அளித்தல்,OC பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் குறைத்தல் குறித்த கருத்துகளை முன் வைத்தோம் சாத்தியமான அனைத்து வழிகள் குறித்தும் மாண்புமிகு அமைச்சருடன் கலந்து பேசுவதாக உறுதி அளித்தார்.
தாளவாடி உள்ளிட்ட கன்னட மொழி சான்றிதழ் மதிப்பீடு குறித்து விதித்தளர்வு அரசாணை நீண்ட கால நிலுவையில் இருப்பதும் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவதும் கர்நாடக அரசிடம் அரசாணை விபரங்களை அரசே எழுதிப்பெற வேண்டும் என வலியுறுத்தினோம்.
ஊதியக்கட்டு நிறைவடைந்த இடைநிலை ஆசிரியர்கள் ஆண்டு ஊதிய உயர்வு பெற இயலாத நிலை உள்ளதை சுட்டிக்காட்டி நிதித்துறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடு நகலை கோருவது தீர்வு ஆகாது எனவும் விரைவில் உரிய அரசாணை வெளியிட ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரினோம். நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நன்றி கூறி விடை பெற்றோம்
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் திரிலோக சந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி துணைத் தலைவர்கள், விஜய், முருகன், இணைச் செயலாளர்கள் நீலமேகன், ராகவன் தலைமையிடச் செயலாளர் ராமச்சந்திரகுமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மு.கந்தசாமி,
பொதுச் செயலாளர், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
7373803777
இன்று 27.05.2026 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் துறை அமைச்சர் திரு.V சம்பத் குமார் அவர்களை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக சந்தித்து கள்ளர் சீரமைப்பு துறை சார்ந்த கோரிக்கைகள் வழங்கிய தருணம். இந்த நிகழ்வில் மாநில தலைவர். திரு . திருலோக சந்திரன் பொதுச் செயலாளர் திரு. கந்தசாமி. மாநிலத் துணைத் தலைவர்கள் திரு விஜய் , திரு.முருகன். இணைச் செயலாளர்கள் திரு ராகவன்,திரு நீலமேகன். தலைமையிடச் செயலாளர் திரு. ராமச்சந்திர குமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு பரமசிவம் ஆகியோர் சந்தித்து அமைச்சரிடம் கள்ளர் சீரமைப்பு துறை சார்ந்த கோரிக்கைகள் வழங்கப்பட்டன. அதிலும் மிக முக்கியமான கோரிக்கையான வெளி மாவட்டத்தில் இருந்து வந்து பணி செய்யும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் மிக முக்கியமான துறை மாறுதல் சம்பந்தமாக தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அமைச்சரவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.
சென்னை மாவட்ட செய்திகள்!!!
தேசிய ஆசிரியர் சங்கம் -மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சருடன் சந்திப்பு :
இன்று (27.05.2026) காலை தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திரு. திரிலோக சந்திரன் அவர்கள் தலைமையில் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. கந்தசாமி, மாநிலத் துணைத் தலைவர்கள் திரு. முருகன், திரு. விஜய், மாநில இணைச் செயலாளர்கள் திரு. ராகவன், திரு தி. நீலமேகன், மாநிலத் தலைமை நிலையச் செயலாளர் திரு. ராமச்சந்திரக் குமார், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் வெ. பரமசிவம் ஆகிய தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களைச் சந்தித்து ஆசிரியர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளான பணிப் பாதுகாப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம்TET தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பு, ஊக்க ஊதியம்,சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யுமாறு தெரிவித்தோம். எங்கள் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள், ஆவன செய்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்👍👍👍👍👍.
Sunday, May 24, 2026
சேலம் - ஆளுமை திறன் மேம்பாட்டு TPD பயிற்சி முகாம் May 2026!!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
பராபவ ஆண்டு வைகாசி 9 மற்றும் 10 (மே மாதம் 23 மற்றும் 24) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி சிவாஜி நகர் அம்மாபேட்டை சேலத்தில் நடைபெற்றது. துவக்க நிகழ்வில் டாக்டர் கிருஷ்ண செட்டி வித்யா மந்திர் கல்வி குழும தாளாளர் அவர்களும் திரு ராசி சரவணன் வணிகர் சங்க தலைவர் சேலம் அவர்களும் பேராசிரியர் ரா குமாரசாமி ஓய்வு பெற்ற பேராசிரியர் சேலம் கலை கல்லூரி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநிலத் தலைவர் திரு மா கோ திருலோகசந்திரன், மாநிலத் துணைத் தலைவர்கள் திரு முருகன், திரு விஜய், திரு வினோத் , மாநிலச் பொது செயலாளர் திரு மு கந்தசாமி , மாநில பொருளாளர் திரு திருஞான குகன் , மாநில இணைச்் செயலாளர் திரு ராகவன்,மாநில மகளிர் செயலாளர் திருமதி ஸ்ரீ சாருமதிதேவி மற்றும் ஊடக அணி இணைச் செயலளர் திரு ஶ்ரீராம் வழிகாட்டுதல்படி இரண்டு நாட்கள் சிறப்பாக பயிற்சி நடைபெற்றது. ABRSM இன் அகில இந்திய பொறுப்பாளர் திரு லட்சுமன் ஜி அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நமது சங்கம் (MISSION & VISION) குறித்து எடுத்துரைத்தார்.இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு கோட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு மன்னார்குடி ஜீயர் ஆசியுரை வழங்கினார்.இதில் ஆசிரியர் ஆளுமை திறன் மேம்பாட்டு சார்ந்த பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. கல்வி ஆற்றில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் மிகச்் சிறப்பாக செய்திருந்தனர்.

























































