Monday, August 31, 2026

சிந்தனை அரங்கம்

 

இன்று

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு_

சிந்தனை அரங்கம்

ஸ்ரீ குரு வணக்கம்

காணொளி கூட்டம் 

ஆவணி 14 

திங்கள்கிழமை 

31.08.2026 

இரவு 8 மணி 


சிறப்புரை: முனைவர். 

அரு. உமா தேவராஜன்,M.A..Phd.,

இலக்கியப் பேச்சாளர், சேலம் 


தலைப்பு: பாதையெல்லாம் பண்பாட்டுப் பூக்கள் 


ஆசிரியர் சகோதர சகோதரிகள் அனைவரும் காணொளியில் இணைவோம், குரு அருள் பெறுவோம். 



ZOOM Meeting ID :

https://zoom.us/j/96673328589?pwd=AxoMT1XTwoLlh8VN555CFopaQYzXeG.1


Meeting ID: 966 7332 8589

PassCode : 12345

Youtube LIVE Link :

https://youtube.com/@desiyaasiriyarsangamtamilnadu?si=W6h8X9Ol6gzX2Gjg





Sunday, August 23, 2026

SMC RECONSTRUCTION




கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்!!!

 பள்ளிக்கல்வி இயக்குனர் (பணி நிறைவு) திரு கண்ணப்பன் அவர்களின் மகள் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது அதில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி , தலைமை ஆசிரியர் லட்சுமிபதி, இணைச்செயலாளர் ராகவன், தலைமை நிலையச் செயலாளர் ராமச்சந்திர குமார்,கோட்ட செயலாளர்கள் ஜான் துரைக்கு மார்,சண்முகநாதன், குமரி மாவட்ட நிர்வாகிகள் காசி சாந்தகுமார்,ராஜன் பாபு , சிவசுப்பிரமணியன், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.











Thursday, August 13, 2026

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 குருவணக்கம் & ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!!!

 திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில், இன்று (12 - 8 - 2026) மாலை திருவள்ளூர் DRBCCC இந்து மேனிலைப்பள்ளியில் குருவணக்கம் & ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநிறைவுப் பாராட்டு விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

 கலைமகள் வணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்டத் மாவட்டத் தலைவர் முனைவர் வெ.பரமசிவம் அவர்கள் வரவேற்புரையாற்ற, மாநில இணைச் செயலாளர் திரு. தி. நீலமேகன் தலைமையுரை வழங்கினார்.


சிறப்பு விருந்தினர்களாகப் பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. வா.பாலமுருகன், திருவள்ளூர் DRBCC இந்து மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. G. V. ராமமோகன், கிளாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. S.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கனகம்மாசத்திரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுநிலை வணிகவியல் ஆசிரியர் திரு. ச. தி. ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களான இரா.கி. பேட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோ.சுந்தர் அவர்களுக்கும் கொட்டாமேடு அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. ச.தட்சணாமூர்த்தி அவர்களுக்கும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில், பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டன.

ஏற்புரை வழங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இருவரும் சங்கத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

 இவ்விழாவில், திருவள்ளூர் கல்வி மாவட்டத் தலைவர் திரு. ஸ்ரீ.சுப்பிரமணி அவர்களும் கல்வி மாவட்டச் செயலர் திரு. மு.ஆனந்தபாபு அவர்களும் ஊடகப்பிரிவுச் செயலர் திரு. நவீன் குமார் அவர்களும் ஊடகப்பிரிவின் உதவிச் செயலர் திரு. கா. ரகுபதி அவர்களும் திருத்தணி கல்வி மாவட்டப் பொறுப்பாளர்களும் திருவள்ளூர் மாவட்ட உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோரும் கலந்து கொண்டனர். 

மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. ம. சதீஷ்குமார் இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் திரு. மே.சு. பார்த்திபன் நன்றியுரை வழங்கினார். இறுதியாக, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.









Tuesday, August 11, 2026

An Appeal

 Akhil Bhartiya Rashtriya Shaikshik Mahasangh 

 PRESS RELEASE

 ABRSM Meets 8th Central Pay Commission, Seeks Justified and Comprehensive Reforms in Pay and Service Conditions

New Delhi, August 10, 2026: A delegation of the Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh (ABRSM) today held a detailed meeting with Justice Ranjana Desai, Chairperson of the 8th Central Pay Commission, Shri Pankaj Jain, Member-Secretary, and other senior officials at the Commission’s office in New Delhi. The delegation discussed various points of a detailed memorandum prepared on the basis of suggestions received from teachers and employees across the country.

The delegation comprised Prof. Narayan Lal Gupta, National President,

 and Prof. Geeta Bhatt, National General Secretary of the Mahasangh  

The Mahasangh emphasized that the recommendations of the 8th Central Pay Commission should take into account inflation, the rising cost of living, real purchasing power, and financial security during both service and retirement. ABRSM demanded a fitment factor of 3.6 to 3.8, an increase in the annual increment from 5 to 6 percent, and the addition of further stages at higher pay levels to raise the maximum pay ceiling. It also called for the reintroduction of the One Step Up provision of the Sixth Pay Commission and stressed the principle of equal pay for equal work.


The Mahasangh demanded that when the Dearness Allowance reaches 50 percent, it should be automatically merged with basic pay. It also proposed that House Rent Allowance be fixed at a minimum of 40, 35 and 30 percent, as applicable. Transport Allowance should be revised in accordance with prevailing costs, while the full expenditure incurred on official tours should be reimbursed through Travel and Daily Allowance.


For professional development, the Mahasangh demanded financial assistance of up to ₹2 lakh annually, along with initial research grants of up to ₹15 lakh in Science subjects and ₹10 lakh in Humanities and Social Sciences. It also proposed separate allowances and advance provisions for digital and academic resources.


It demanded that the limit of House Building Advance be increased to at least four times the existing limit, with provision for purchase of land, construction of houses, purchase of ready-built houses, and renovation within its scope.


With regard to leave provisions, the Mahasangh demanded 15 days of Casual Leave, an additional 15 days of Special Casual Leave, an increase in the accumulation limit of Earned Leave from 300 to 400 days, and an increase in the maximum leave that can be availed at one time from 60 to 90 days. It proposed a minimum of 20 days of Medical Leave with full pay, 8 months of Maternity Leave, 30 days of Paternity Leave, and 60 days of leave for parental care. It also demanded provision for 100 percent pay throughout the eligible period of Child Care Leave.


For health security, the ABRSM proposed cashless medical facilities up to ₹20–25 lakh, an increase in LTC encashment from 10 to 20 days per journey, a tax-free contribution limit of ₹25 lakh under Provident Fund, and enhancement of group insurance coverage to ₹50 lakh.


Regarding promotions, the Mahasangh demanded that employees be assured of at least four promotional opportunities during their entire service, that artificial barriers to promotion be removed, and that adequate posts be created and made available at every level.


Under retirement security, the Mahasangh demanded an assured pension of 60 to 67 percent of the last drawn pay and a family pension of approximately 50 percent. It proposed increasing the gratuity ceiling to ₹75 lakh, along with an automatic 25 percent increase in the gratuity ceiling for every 50 percent increase in Dearness Allowance. It also demanded that the restoration period for commuted pension be reduced from 15 years to 11–12 years, that up to 50 percent of pension be permitted for commutation, and that the full pension be restored upon completion of the prescribed period.


The Mahasangh demanded social security for contractual, ad hoc and temporary employees and called for greater emphasis on regular appointments. In view of increasing life expectancy and the need to make better use of the experience and expertise of senior employees, it also suggested that the possibility of raising the retirement age to 65 years be considered.

The Mahasangh urged the Commission to ensure that the 8th Central Pay Commission does not remain confined merely to revision of salaries, but undertakes a comprehensive review of pay, allowances, advances, promotions, service conditions, leave, social security, pension and retirement benefits. It also suggested a regular pay revision cycle of approximately five years, or an automatic revision mechanism linked to inflation, so that the real purchasing power of employees can be protected.

The Mahasangh expressed confidence that the Commission would give serious consideration to the suggestions presented in the memorandum and recommend a justified, transparent and modern framework that ensures dignified financial security for employees both during their service and after retirement.





Paper News

 



Friday, August 7, 2026

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

ஈரோடு மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு சார்பாக 

குரு வணக்கம் நிகழ்ச்சி ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர், திரு இரா. திருஞான குகன் அவர்கள் தலைமையில், கோட்ட பொறுப்பாளர் திரு ஆ.ப. ஸ்ரீ ஹரி சிறப்பு கருத்தாளர், மாவட்ட தலைவர் திரு மு.சண்முக ராஜுலு, மாவட்ட செயலாளர் திரு து. ஸ்ரீ தரன், மாவட்ட பொருளாளர் திரு சு.ர.சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திரு த. கிருத்திகா, இணைச்செயலாளர் திரு மு. சந்திர சேகர், மாவட்டத் துணைத் தலைவர் திரு சு.செந்தில் வேலன், ஈரோடு ஒன்றிய செயலாளர் திரு ப.மயில்சாமி மற்றும் தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









Tuesday, August 4, 2026

TAPS

 CLICK HERE TO DOWNLOAD 

நண்பர்களே வணக்கம் 🙏

TAPS 

1.1.26 முதல் CPS retirement employees

Interim monthly payout option கொடுக்கலாம் அல்லது CPS final closure letter கொடுக்கலாம் 👍

நீங்க அறிந்ததே

தற்போது interim monthly payout sanction order ( DDO/ SR mainten authority) வழங்கலாம் என அரசாணை வந்துள்ளது 🙏


1) ஓய்வு பெற்ற பணியாளர் செய்ய வேண்டியது


* விண்ணப்பம்/ விருப்ப கடிதம் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தில் வழங்குதல்

* Form 1 வழங்குதல்

* உரிய இணைப்புகள் வழங்குதல்

* எல்லாம் 3 பிரதிநிதிகள்

* காலக்கெடு பணி ஓய்வில் இருந்து 60 நாட்கள்

* 1/1/26 to 31/5/26 வரை ஓய்வு எனில் அரசாணை வந்து 60 நாட்களுக்கு உள்ளே

* அரசாணை 16/6/26 எனவே 16/8/26 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

2) தலைமை ஆசிரியர்/ Head of office/ SR maintenance Authority செய்ய வேண்டியது

* 1/1/26 க்கு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாணை 111 தகவல் தெரிவித்தல்

* அவர்கள் இடம் இருந்து விருப்ப கடிதம் விண்ணப்பம் உரிய இணைப்புகள் பெறுதல்

* CPS final closure எனில் option letter வாங்கி தற்போது உள்ள நடைமுறை படி CPS final settlement letter IFHRMS இல் process செய்து சென்னை அனுப்புதல்

* TAPS Interim Monthly payout option எனில் , form 1 attestation, 

* Manual preparation of sanction order

* processing in IFHRMS

* annexure 1 download from IFHRMS ( some technical issues will be rectified soon)

* Fill manually the unfilled details in annexure 1 (download form)

* Process through IFHRMS

* upload necessary attachments

* process steps/flow chart shared by DTA CPS wing Chennai

* Virudhunagar, Salem, The Nilgiri DTOs shared procedure in screenshot refer it

* for further details contact your ST/PAO/District Treasury

* Chennai CPS wing (DTA) department will process it

* DDO should maintain the interim monthly payout register ( model attached)

* easy steps... 

* முதல் முறையாக என்பதால் சில இடங்களில் technical issues வரலாம்.... 

* எல்லாம் விரைவில் சரி செய்யப்படும்..

* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப் பலன் கிடைக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது...

* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் சிரமங்களை குறைத்திட வேண்டும் என்ற நோக்கில் அரசு நினைக்கிறது...

* நாமும், ஓய்வு பெற்றவர்களின் கண்ணியம் காத்து. உரிய பலன்களை அவர்கள் சிரமம் இன்றி பெற்றிட உறுதுணையாக இருப்போம்


கூடுதல் விவரங்களுக்கு தங்களின் STO/PAO/DTO தொடர்பு கொள்ளுங்கள் 


Sunday, August 2, 2026

கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்!!!

 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் குரு வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் சுமார் 40 ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














Saturday, August 1, 2026

பவானி சாகர் வட்டார செய்திகள்!!!

 பவானி சாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்களுடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!!!


இன்று (1-8-26) பவானி சாகர் தொகுதி எம்.எல்.ஏ. திருமதி தமிழ்ச்செல்வி அவர்களை 

மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி , மாவட்ட இணைச்செயலாளர் மனோகரன், சத்தி வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தாளவாடி ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர் 

 தாளவாடி வட்டார ஆசிரியர்களின் சான்றிதழ் மதிப்பீடு செய்ய அரசாணை வழங்கிட வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அனைவருக்கும் 60 என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

 2010 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கேரளா அரசைப் போன்று 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என கோரப்பட்டது.




Friday, July 31, 2026

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

 CLICK HERE TO DOWNLOAD 




மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஈரோட்டில் சந்திப்பு


இன்று (31-7-26) ஈரோடு வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களை தேசிய ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில் மாநில பொருளாளர் திருஞான குகன், ஈரோடு மாவட்ட தலைவர் சண்முக ராஜூலு, செயலாளர் ஸ்ரீதரன் , மகளிர் அணி செயலாளர் திருமதி கிருத்திகா மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் இணைச்செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

சந்திப்பின் போது 

அரசுப்பள்ளியில் 8 ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த உள்ளமைக்கும்,

அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் வினாத்தாள் கட்டணம் ரத்து செய்ய பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்தமைக்கும் நன்றி தெரிவித்தோம் 

அதே சமயம் 

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி வழங்குதல் 

6-8 வகுப்புகளில் ஆல் பாஸ் நடைமுறையை மறுபரிசீலனை செய்தல் 

கூடுதல் தேவை என கண்டறியப்பட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களளை இயக்குனர் பொதுத்தொகுப்பிலிருந்து தேவையான பள்ளிகளுக்கு வழங்கி பணியிடம் நிரப்பப்படும் வரை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்ப அனுமதி அளித்தல் 

ஆசிரியர் பயிற்றுநர் ஊதியத்தை IFHRMS மூலம் வழங்க நடவடிக்கை எடுத்தல் 

தாளவாடி வட்டார ஆசிரியர்களின் கர்நாடக மாநில சான்றிதழ் மதிப்பீடு செய்து ஆணை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினோம் அனைத்தையும் பரிசீலனை செய்வதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்

Tuesday, July 28, 2026

சென்னையில் இன்று 28.07.2026 நடைபெற்ற மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட நமது கோரிக்கைகளின் விவரம்!!!

 மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர்கள் திரு விஜய், திரு.முருகன் ஆகியோர் இன்று நடைபெறக்கூடிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD