Showing posts with label ஆசிரியர் உலகம். Show all posts
Showing posts with label ஆசிரியர் உலகம். Show all posts

Tuesday, June 4, 2024

உலக சுற்றுச்சூழல் தினம் - சிறப்பு செய்தி !!!

 உலக சுற்றுச்சூழல் தினம் ஏன் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது?

1972 ஆம் ஆண்டு  ஜூன் 5 ஆம் தேதி, ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. 1973-ஆம் ஆண்டு இந்த தினத்தை போற்றும் வகையில், உலகம் தனது முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள்:

ஒவ்வொரு ஆண்டும், காலநிலை மாற்றம் முதல் புவி வெப்பமடைதல் , காடழிப்பு வரை உடனடி பிரச்சனைகளை குறிவைத்து ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2024-ம் ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் - நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்க்கும் தன்மையாகும். "பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. உடன்படிக்கையின்படி, கிரகத்தின் நிலப்பரப்பில் 40 சதவீதம் வரை சீரழிந்து, உலக மக்கள்தொகையில் பாதியை நேரடியாக பாதிக்கிறது. வறட்சியின் எண்ணிக்கையும் கால அளவும் 2000-லிருந்து 29%  அதிகரித்துள்ளது - துரித  நடவடிக்கை இல்லையெனில் வறட்சி மிக மோசமாக 2050க்குள் உலக மக்கள்தொகையில் முக்கால்வாசிப் பேரை பாதிக்கலாம்" என்று ஐக்கிய நாடுகள் சபை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தொகுப்பு :

S.பரமசிவம்,
அறிவியல் ஆசிரியர்,
மாவட்டத் தலைவர்,
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு,
மதுரை மாவட்டம்.
கைபேசி : 9894313079





Saturday, February 17, 2024

வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! என்ற புத்தகத்தில் இருந்து ஒரு சிறு பகுதி

 விருப்பமான இடமாக வகுப்பை மாற்ற என்ன செய்யலாம்?

1. மாணவ,மாணவிகளின் தனித்திறமைகளை பாராட்ட வேண்டும்.

2. மாணவர்கள் செய்யும் தவறுகளை அனைவரின் முன்னிலையில் கூறாமல் தனியாக அழைத்து கூறிப் புரிய வைக்க வேண்டும்.

3. வகுப்பிற்கு வெளியே மாணவர்களின் பழக நேரிடும் பொழுது அவர்களை சமமாக பாவிக்க வேண்டும்.

4. அனாவசியமான, உண்மை இல்லாத மரியாதையை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.

5. பாடம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் சம்பந்தமான கேள்விகளை கேட்டு உற்சாகப்படுத்த வேண்டும்.

6. மாணவர்கள் சந்தேகம் கேட்கும் பொழுது முதலில் அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். பின்பு சந்தேகத்திற்கான விடையை கூற வேண்டும் .

7. கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் குழுவாக செயல்பட வழி காட்ட வேண்டும். விதிமுறைகளை முதலிலேயே கூறிவிட்டு அதை மீறாத வகையில் நிகழ்ச்சி இருக்க வேண்டும்.

8. செயல் திட்டங்களை முதலிலேயே வடிவமைத்து அனைவரும் கலந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.

9. ஆசிரியர்கள் வகுப்பறையில் தங்கள் துறை சார்ந்த வல்லுநர்களின் வாழ்க்கை வரலாறையும், துன்பம் கண்டு துவையாமல் போராடி வெற்றிவாகை சூடியவர்களின் வாழ்க்கை வரலாறையும் சுருக்கமாக கூற வேண்டும். இதன் மூலம் அவர்களின் உயர் மன நலனை தூண்டலாம்.

10. பெற்றோர்களிடம் மாணவர்கள் பற்றி புகார் தர வேண்டி இருந்தால் அவற்றை கண்ணாடியை கையாள்வது போல கவனமாக கையாள வேண்டும்.

வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே !

புத்தக வெளியீடு :

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்,

மயிலாப்பூர்,

சென்னை - 4