Saturday, February 17, 2024

வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! என்ற புத்தகத்தில் இருந்து ஒரு சிறு பகுதி

 விருப்பமான இடமாக வகுப்பை மாற்ற என்ன செய்யலாம்?

1. மாணவ,மாணவிகளின் தனித்திறமைகளை பாராட்ட வேண்டும்.

2. மாணவர்கள் செய்யும் தவறுகளை அனைவரின் முன்னிலையில் கூறாமல் தனியாக அழைத்து கூறிப் புரிய வைக்க வேண்டும்.

3. வகுப்பிற்கு வெளியே மாணவர்களின் பழக நேரிடும் பொழுது அவர்களை சமமாக பாவிக்க வேண்டும்.

4. அனாவசியமான, உண்மை இல்லாத மரியாதையை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.

5. பாடம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் சம்பந்தமான கேள்விகளை கேட்டு உற்சாகப்படுத்த வேண்டும்.

6. மாணவர்கள் சந்தேகம் கேட்கும் பொழுது முதலில் அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். பின்பு சந்தேகத்திற்கான விடையை கூற வேண்டும் .

7. கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் குழுவாக செயல்பட வழி காட்ட வேண்டும். விதிமுறைகளை முதலிலேயே கூறிவிட்டு அதை மீறாத வகையில் நிகழ்ச்சி இருக்க வேண்டும்.

8. செயல் திட்டங்களை முதலிலேயே வடிவமைத்து அனைவரும் கலந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.

9. ஆசிரியர்கள் வகுப்பறையில் தங்கள் துறை சார்ந்த வல்லுநர்களின் வாழ்க்கை வரலாறையும், துன்பம் கண்டு துவையாமல் போராடி வெற்றிவாகை சூடியவர்களின் வாழ்க்கை வரலாறையும் சுருக்கமாக கூற வேண்டும். இதன் மூலம் அவர்களின் உயர் மன நலனை தூண்டலாம்.

10. பெற்றோர்களிடம் மாணவர்கள் பற்றி புகார் தர வேண்டி இருந்தால் அவற்றை கண்ணாடியை கையாள்வது போல கவனமாக கையாள வேண்டும்.

வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே !

புத்தக வெளியீடு :

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்,

மயிலாப்பூர்,

சென்னை - 4





No comments:

Post a Comment