தலைவரின் செய்தி

தேசிய ஆசிரியர் சங்கம்
வாழ்த்துரை

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

 நற்றாள் தொழாஅர் எனின்.  

    ( திருக்குறள் -  கடவுள் வாழ்த்து )


 "கற்றலின் நோக்கம்  இறை நிலை  அடைதல்"  என்ற உணர்வு அலைகளை உள்ளத்தில் எழுப்பும் உன்னதமான ஆசிரியர்கள் நிறைந்த சங்கம்.


 கல்வியையும் தேசத்தையும் இரு கண்களாய் போற்றக் கூடியவர்கள் நம் ஆசிரியர்கள்.


 கசடறக் கல்வியைக் கற்பித்து காலத்தை வெல்லும் வல்லமையையும் ஒழுக்கத்தையும் மாணக்கருக்கு அளிக்கும் நல்லாசிரியர் நலன் நாடும் சங்கம் தேசிய ஆசிரியர் சங்கம்.


 அவர்தம்  கோரிக்கைகளை ஆற்றலோடு அரசுக்கு தெரிவித்து, தீர்வு காணும் முதல் குரல் நம் சங்கத்தின் குரல்.


 உரிமையைக் கேட்பதில் மட்டுமே உவகை கொள்ளாமல் கடமையைக் கண்ணும் கருத்துமாக செய்து களிப்படைபவர்கள் நம் சங்கத்தினர்.


 மாணவர் நலனையும், மக்கள் நலனையும் ஒன்றாய் போற்றும் நம் ஆசிரியர்கள் இயற்கை பேரிடர் காலத்திலும்,  செயற்கை நோய் பரவிய காலத்திலும் கலங்காமல் களம் கண்டவர்கள்.


 நம் நாட்டில் கொரோனோ தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிய காலம் தொட்டு  இன்று வரை பல்வேறு நலத் திட்டங்களை நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் செயல்படுத்தி வருகிறார்கள்.


 ஆர்சனிக் ஆல்பம் மாத்திரை 

கபசுரக் குடிநீர் 

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 

போர்வை 

என பல பொருட்களை ஆத்மார்த்தமாக அள்ளி வழங்கி வருகிறது இச்சங்கம்.

நமது தேசிய ஆசிரியர்  சங்கப் பெருமக்கள் தடுப்பூசி போடும் முகாம்களிலும், நோயுற்றவரைக் கண்டறிந்து உதவும் பணியிலும் அரசின் தன்னார்வலர்களாகவும்,கொரோனா பாதித்தவர்களுக்கு மருந்து, மருத்துவ வசதி மற்றும் வழிகாட்டல், மனநல, உடல்நல ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகளாலும் ஈடுபட்டு சேவை செய்கின்றனர்.

 களப்பணி மட்டுமல்லாது நல் கருத்துக்களை வழங்கும் பணியையும் செய்கிறது நம் சங்கம். அறிவில் சிறந்த ஆன்றோர்கள்,  கற்று சிறந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் மருத்துவர்கள் என பல்துறை வித்தகர்களின் உயரிய கருத்துக்களை சிந்தனை அரங்கம் மூலமாக இளைய சமுதாயத்திற்கு வழங்கி வருகிறது.


 தகுதி மிக்க  பொறுப்பாளர்களையும், தன்னிகரற்ற செயல் வீரர்களையும் கொண்ட நம் சங்கம் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன.


 தங்கத்தின் தரமும் …

 சிங்கத்தின் திறமும் கொண்ட

 நம் சங்கத்தில் 

அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்வோம். 


 வாழ்க பாரதம் 

ஜெய் ஹிந்த்…..

ம.கோ.திரிலோகசந்திரன்  M.Sc.,M.Ed.,M.Phil.,

மாநில தலைவர்,

தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு. 


தேசிய ஆசிரியர் சங்கத்தில் இணைய CLICK HERE

 

TO GO TO HOME PAGE CLICK HERE

2 comments:

  1. அற்புதமான அணிந்துரை வழங்கியுள்ளார் தேசியமும் தெய்வீகமும் என்றும் தமிழகத்தின் இருகண்கள் என எப்போதும் முழங்கிடுவோம் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. இந்த வலைதளத்தை வடிவமைத்தமைக்கு நன்றி தலைவரே! - சி.தர்மலிங்கம் கள்ளக்குறிச்சி

    ReplyDelete