உலக சுற்றுச்சூழல் தினம் ஏன் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது?
1972 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி, ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. 1973-ஆம் ஆண்டு இந்த தினத்தை போற்றும் வகையில், உலகம் தனது முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள்:
ஒவ்வொரு ஆண்டும், காலநிலை மாற்றம் முதல் புவி வெப்பமடைதல் , காடழிப்பு வரை உடனடி பிரச்சனைகளை குறிவைத்து ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2024-ம் ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் - நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்க்கும் தன்மையாகும். "பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. உடன்படிக்கையின்படி, கிரகத்தின் நிலப்பரப்பில் 40 சதவீதம் வரை சீரழிந்து, உலக மக்கள்தொகையில் பாதியை நேரடியாக பாதிக்கிறது. வறட்சியின் எண்ணிக்கையும் கால அளவும் 2000-லிருந்து 29% அதிகரித்துள்ளது - துரித நடவடிக்கை இல்லையெனில் வறட்சி மிக மோசமாக 2050க்குள் உலக மக்கள்தொகையில் முக்கால்வாசிப் பேரை பாதிக்கலாம்" என்று ஐக்கிய நாடுகள் சபை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
தொகுப்பு :
S.பரமசிவம்,
அறிவியல் ஆசிரியர்,
மாவட்டத் தலைவர்,
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு,
மதுரை மாவட்டம்.
கைபேசி : 9894313079
No comments:
Post a Comment