Monday, August 11, 2025

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று மாலை (11.8.25) 4 மணி அளவில் மதுரை மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக ஜெய்ஹிந்த்புரத்தில்அமைந்துள்ள குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் குரு வந்தனம்,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நிகழ்வு,விடுதலைப் போராட்ட வீரர் மதிப்புமிகு தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நூற்றாண்டு நினைவு தின விழா,👨🏻‍✈️👨🏻‍✈️👨🏻‍✈️மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு 🥇🥇🥇🥇🥇🏆🏆🏆🏆விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை பெருமக்கள் விளக்கு 🎉🎉🎉🎊🎊🎊🎊ஏற்றி தமிழ் தாய் வாழ்த்து,மற்றும் சரஸ்வதி வந்தனத்துடன்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 மாணவ மாணவிகள் பிரார்த்தனையுடன் 🏵️🏵️🏵️🏵️🏵️விழாவானது தொடங்கப்பட்டது.விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை ஏற்றார்.பள்ளி ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களை அன்புடன் வரவேற்றார்கள்💐💐💐💐💐💐💐💐.விழாவில் குருகுல பள்ளி ஆசிரியர்கள், நமது செயலாளர், பொருளாளர் தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தங்கள் உரையின் வாயிலாக ஆசிரியரின் முக்கியத்துவத்தையும், குருவந்தனத்தில் முக்கியத்துவத்தையும் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிதாக எடுத்துக் கூறினார்கள்.மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களின் பேச்சுத் திறன் திருப்புகழ் ஒப்புவித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது,பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நம்முடைய ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் மற்றும் செயலாளர் பொன்னாடை போற்றி கௌரவித்தார்கள் மற்றும் விழாவில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். நமது அமைப்பின் சார்பாக 30 ஆண்டுகளுக்கு மேல் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஆன்மீக மற்றும் ஆசிரியர் பணி செய்துவரக்கூடிய திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் திரு. செல்லப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துகளுடன் கூடிய ம நினைவு பரிசு பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்பட்ட கௌரவிக்கப்பட்டார்.என் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது🏆🏆🏆🏆🏆.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.திருப்புகழ் ஒட்டுமைத்தல் போட்டியில் பரிசு பெற்ற மாணவிக்கு திருப்புகழ் புத்தகம் 📗📗📗📗📗📗📗பரிசாக வழங்கப்பட்டது.நிறைவுரை ஆற்றிய தேசிய சங்கத்தின் தலைவர் திரு. சா .பரமசிவம் குருவந்தனைகள் முக்கியத்துவத்தை மாணவர்கள் எளிமைமையாக புரிந்து கொள்ளும் மாறு விளக்கினார்கள். மாவட்ட பொருளாளர் திரு.ஆறுமுக கடவுள் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்று விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.நிகழ்ச்சிக்கான ஒட்டுமொத்த ஏற்பாடுகளையும் தேசிய சங்கம் மதுரை மாவட்டம் செயலாளர் திரு. கணேசன் அவர்கள் திறம்பட ஏற்பாடு செய்து நன்றி உரையாற்றினார். நாட்டுப் பண் மற்றும் சாந்தி மந்திரத்துடன் விழா நிறைவு பெற்றது.🏵️🏵️🏵️🏵️🏵️👍👍👍👆🏼🤝🤝🤝🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.

















No comments:

Post a Comment