இன்று 21.8.25 வியாழன் மாலை 6 மணி அளவில் பாரதிதாசன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாரியப்பன் - வேதவல்லி நினைவு பயிலகத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக குரு வந்தன நிகழ்வு குத்து விளக்கு ஏற்றப்பட்டு சரஸ்வதி வணக்கத்துடன் சிறப்பாக துவங்கப்பட்டது.மாரியப்பன் வேதவல்லி இலவசபயிலகத்தின் நிறுவனர் திரு. தமிழரசன் அவர் தலைமை தாங்கினார்.தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு கணேசன் வரவேற்புரை ஆற்றினார் மதுரை மாவட்டத்தில் உறுப்பினர் திரு. செல்லப்பாண்டி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். தமிழரசன் அவர்கள் தலைமை உரையாற்றினார் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர்.திரு.சா பரமசிவம் நிறைவுரை யாற்றினார். நிகழ்வில் பேசிய அனைவரும் ஆசிரியர்கள் 💯 முக்கியத்துவம் மாணவர்களுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு ஆசிரியரின் பங்கு இந்திய கலாச்சாரத்தில் சிறந்த ஆசிரியர்கள் எவ்வாறெல்லாம் தங்களுடைய மாணவர்களை வாழ்க்கையில் வெற்றி பாதையில் மாற்றினார்கள் என்பது எடுத்துக் கூறினார்கள்.இலவச பயிற்சி மையத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் அனைவருக்கும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி புத்தகம் பரிசளிக்கப்பட்டது.நிறுவனத் தலைவர் திரு தமிழரசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பொன்னாடை மற்றும் புத்தகம் பரிசாக அளிக்கப்பட்டது.இலவச பயிலகத்தில் சிறப்பாக பயிலக்கூடிய மாணவ கண்மணிகளுக்கு, தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.நாட்டுப் பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.நிகழ்வு 40 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
.
No comments:
Post a Comment