தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தும் கோரிக்கை மனுவானது, ஓய்வூதியக் குழுத் தலைவர் திரு. ககன் தீப் சிங் பேடி அவர்களிடம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு.ம. கோ.திரிலோக சந்திரன், மாநில பொதுச் செயலாளர் திரு மு. கந்தசாமி, மாநிலத் துணைத் தலைவர் திரு து .முருகன், சென்னை கோட்ட செயலாளர் திரு. ராமச்சந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரு மு. கந்தசாமி அவர்கள் பேசுகையில் இக்குழு காலநீட்டிப்பு எதுவும் கோராமல் உரிய காலத்தில் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் 01.04.2003 முதலே பழைய ஓய்வூதியத் திட்டத்தினை விரைவில் அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment