Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts
Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts

Saturday, September 17, 2022

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டம் 17/09/2022

எட்டு திக்கிலிருந்தும்
புடை சூழ
வந்திருக்கும் ஆசிரியர்கள்/அலுவலர்கள் 
வெள்ளத்தில் மாநில பொதுக்குழு
தொடங்கியது...
இடம்: 
ஸ்ரீ சாரதா நிகேதன்
பெண்கள் கல்லூரி
கரூர். 

தேசியமும் தெய்வீகமும் நம் கண்கள்


Wednesday, June 8, 2022

தருமபுரியில் கோரிக்கை விளக்கவாயிற்கூட்டம்

 இன்று 08/06/2022 புதன்கிழமை தருமபுரி மாவட்டம் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் பத்தாம் வகுப்பு திருத்தும் முகாமில்

மாநிலத்தலைவர் திரு.ம.கோ.திரிலோகச்சந்திரன்  அய்யா அவர்களின் ஆலோசனைப்படியும், மாநில பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு .மு.கந்தசாமி அய்யா அவர்களின் வழிகாட்டுதல்படியும் நமது தேசிய ஆசிரியர் சஙகத்தின் சார்பாக மாவட்டத்தலைவர் திரு. சி.துரைசாமி அவர்கள் நமது சங்கத்தின் செயல்பாடுகள், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் சமுதாயத்திற்கும் இத்தேசத்திற்கும் நமது சங்கம் செய்துவரும் பணிகள் குறித்தும் ,


நமது  ஆசிரியர்களின் முதன்மையான கோரிக்கையான 

பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்துவது, 


நிலுவையில் உள்ள பழைய  21 மாத அகவிலைப்படி , 


தற்போது வழங்காமல் உள்ள அகவிலைப்படி , 


நிறுத்தப்பட்டுள்ள சரண்டர் தொகைபெற வழிவகை செய்தல் ,

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச்சட்டம் வழங்குவதின்  அவசியம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவரித்து பேசினார். 

இக்கூட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலைவர் திரு சுரேஷ் அவர்கள்முன்னிலை வவகித்தார். 

மேலும் கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள்,சங்க உறுப்பினர்கள்,ஆசிரியப்பெருமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுப்பணி மற்றும்விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழங்கப்படும் மதிப்பூதியமானது மேல்நிலை வகுப்புகளுக்கு வழங்கப்படுவதைக்காட்டிலும் குறைவான  மதிப்பூதியம் வழங்குகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி சரிசமமாக மதிப்பூதியம் வழங்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர். 

கோரிக்கையை மாநில அளவில் எடுத்துச்செல்லப்பட்டு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டத்தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்டது. 

 குறிப்பு:

கூட்டம் தொடங்குவதற்குமுன் நமது சங்கம்சார்ந்த  மற்றும் ஆசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும், இச்சமுதாயத்திற்காகவும் ,தேசத்திற்காகவும் முன்னெடுக்கும் செயல்விளக்க நோட்டீஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

இறுதியில் நன்றியுரையுடன் கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது. 

இப்படிக்கு

சி துரைசாமி

தலைவர்

தேசிய ஆசிரியர் சங்கம் 

தருமபுரி மாவட்டம் .


செய்தி வெளியீடு :

மாநில ஊடகப் பிரிவு,

தேசிய ஆசிரியர் சங்கம்,

தமிழ்நாடு.





Tuesday, June 7, 2022

பழனி வட்டார செய்திகள்

06/06/2022 அன்று பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் (பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம் - ஜூன் 2022) தேசிய ஆசிரியர் சங்க கைபிரதி வழங்கப்பட்டது.இந்நிகழ்வில்    மகளிர்அணிச்செயலாளர்   திருமதி.ஸ்ரீ.சாருமதிதேவி மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.








திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

 Pamplet of our Desiya Asiriyar Sangam TamilNadu was distributed to all teachers entering into the valuation  camp June 2022 at Dindugal District by Our State Vice President Mr P Vijay and other Office Bearers...





தருமபுரி மாவட்ட செய்திகள்

 கடந்த வாரம் ஜம்முகாஷ்மிர் மாநிலத்தில் தான் பணியாற்றும்  அரசுப்பள்ளியிலேயே ஆசிரியை திருமதி ரஜினி பாலா  அவர்கள் தீவரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும்  ஆசிரியகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரியும்  மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலைக் கவர்னர் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர்மூலம்  தருமபுரி தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக  06/06/2022 அன்று மனு அளிக்கப்பட்டது..

இம்மனு மாநிலத் துணைத்தலைவர் திரு. முருகன், மாவட்டத் தலைவர் திரு.துரைசாமி மற்றும் மாவட்டத்துணைத் தலைவர்  திரு. சுரேஷ் ஆகியோர்மூலமாக வழங்கப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD



Monday, May 2, 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

 கள்ளக்குறிச்சி சேவாபாரதி மற்றும் நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை தேசிய ஆசிரியர் சங்கம் இணைந்து பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்திய பதினோராம் ஆண்டு ஐயகிரிவர் தன்வந்திரி ஹோமம் மற்றும் பூஜை நிகழ்ச்சி நமது பாரத மாதா நூலகத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பிரசாதமாக பூஜையில் வைக்கப்பட்ட பேனா பாக்ஸ் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு கங்கனம் கயிறு வழங்கப்பட்டது.இந்த இனிய நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் திரு.தர்மலிங்கம் அவர்கள் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

 







Tuesday, April 26, 2022

தருமபுரி மாவட்ட செய்திகள்

 


25/04/2022 அன்று புதியதாக பொறுப்பேற்றுக்க் கொண்ட
 தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர் அய்யா அவர்களை
 நமது தருமபுரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக சந்தித்து பதவியேற்றுக்கொண்டதற்கான வாழ்த்துகளும்,தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. மேலும் தற்போது நடைபெற இருக்கும் 10 மற்றும்  12 ஆம் வகுப்பு  பொதுத்தேற்விற்கான அறை கண்காணிப்பாளர்களை அந்தந்த ஒன்றியத்திற்குள்ளே ஆசிரியர்களை பணியமர்த்தப்படும்போது அந்தந்த ஆசிரியர்களின் இருப்பிடத்தை கவனத்தில்கொண்டு பணியாணை வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அய்யா அவர்களும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து முடிந்தவவரை அவ்வாறு ப்ணியாணை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.அப்போது அய்யா அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.  மேலும் இந் இனிய நிகழ்வில் மாவட்டத் தலைவர்
திரு. சி.துரைசாமி மாநிலத்துணை தலைவர் திரு. முருகன் அய்யா,மாநில மகளிர் அணி இணை செயளாலர் திருமதி.சித்ரா மற்றும் கல்வி மாவட்டத் தலைவர்கள்
திரு. இராஜா,திரு. சதீஷ்குமார் மற்றும் பலர்
உடனிருந்தனர்.

Tuesday, April 19, 2022

பழனி வட்டார செய்திகள்

 பழனி DEO, BEOs, Gghss.H.M. ஆகியோருக்கு சுபகிருது வருட புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.





 

நாமக்கல் மாவட்ட செய்திகள்

 நாமக்கல் மாவட்ட மாதாந்திர கூட்டம்  16.4.22 சனிக்கிழமை திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு. ராஜேந்திரன்,

மாவட்ட துணைத்தலைவர்
திரு. தமிழ் மணி

மாவட்ட இணைச் செயலாளர்
திரு. மகாலிங்கம்

மாவட்ட இணைச்செயலாளர்
திரு. மதேஸ்வரன்

மாவட்ட ஊடகச் செயலர்
திரு. ராஜூ

ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலப் பொருளாளர்
திரு. திருஞானகுகன் 

 
திண்டிவனம் மாநிலச் செயற்குழு பற்றி விளக்கினார்.
மேலும் நமது மாவட்ட வளர்ச்சி பணிக்கு ஆலோசனை வழங்கினார்.

எனது பள்ளி எனது புனிதத் தலம்
திட்டம் பற்றியும், அனைத்து சங்க வளர்ச்சி பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

 


 

ஈரோடு மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் ஈரோடு மாவட்டம்- மாதாந்திர 16 APRIL 2022 கூட்டம், ஈரோட்டில் இனிதே நடைபெற்றது, இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்-

ஸ்ரீ S.செந்தில்வேலன்,

ஸ்ரீ து.ஸ்ரீதரன்,

ஸ்ரீ மு.சண்முக ராஜுலு,

ஸ்ரீ இர.திருஞான குகன்,

ஸ்ரீ இரா.கோகுல்நாதன்,

ஸ்ரீ மு.சந்திரசேகரன்,

ஸ்ரீ சு.ர.சுரேஷ்குமார்.

மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்👇🏻

# கல்வி ஆண்டின் அடிப்படையில் புதிய/புதுப்பிக்க வேண்டி உறுப்பினர்களை சந்தா பெற்றிட வேண்டும்.

# ஒவ்வொரு மாதமும் நான்காம் வாரம் ஞாயிறன்று மாலை தே.ஆ.ச ஈரோடு மாவட்ட கூட்டம் நடைபெறும்.

# பண்பாட்டு வகுப்பு மே 15 முதல் 25 வரை தங்களது இருப்பிடத்தில் நடத்தப்படுதல் வேண்டும்.

# நிர்வாகிகளுக்கு visiting card/letter pad/ stamps தயாரித்திட வேண்டும்.

# சங்க வளர்ச்சி- ஊடகத்தின் முக்கிய பங்கு உள்ளது.

# ஈரோடு மாவட்டம்- 14 ஒன்றியங்களில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்.

# மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத்திற்குள் சங்க பணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

# தேசிய கல்விக்கொள்கை 2020 அனைத்து நிர்வாகிகளும் அறிந்திருக்க வேண்டும்.

# தே.ஆ.ச ஈரோடு மாவட்டத்திற்கு மகளிர் பங்கு முன்னேற்றம் தேவை.

# துறை உயர் அலுவலர்கள்/சக அலுவலர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை அளித்திட வேண்டும்.

# etc.,

இங்ஙனம்,

தேசிய ஆசிரியர் சங்கம் ஈரோடு மாவட்ட நிர்வாகம்.

 


 

பழனி வட்டாரச் செய்திகள்

 பழனி தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் 18.04.2022 அன்று சுபகிருது புத்தாண்டு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தமிழ்நாடு,சமுதாய நல்லிணக்கப் பேரவை அமைப்பாளர்  திரு.இராஜமுருகானந்தம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சேவா பாரதி தலைவர் திரு.அம்பி (எ) இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமைதாங்கி உரையாற்றினார்.பழனி கல்வி மாவட்டத் தலைவர் திருமதி. ஜான்சிராணி முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் திரு. இராஜபாண்டியன் நள்றியுரை வழங்கினார். திருமதி. லஷ்மிப்பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









 

 

 

Wednesday, April 13, 2022

திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள்

 12.04.2022 செவ்வாய் கிழமையன்று மாலை திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை அவரது அலுவலகத்தில் நம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.





Monday, April 11, 2022

Tamil NewYear Greetings to DSE Officials

 Desiya asiriyar Sangham Tamilnadu State and District office bearers met various officials of our Education Department and issued New Year greetings.Our general secretary Thiru. Kandasamy and President Thiru. Tirulogachandaran And Treasurer Thiru.Thirugnanaguhan led the state and district team. We also had a good chance to introduce our association and activities to officials.






















கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

 கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக இன்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் களுக்கும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர் அவர்களுக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.




இந்த இனிய நிகழ்வில் விழுப்புரம் கோட்ட செயலாளர் திரு.கதிர்வேல், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு. பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திரு. கோவிந்தன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரு. ராமச்சந்திரன், திரு.தியாகராஜன் , கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட செயலாளர் திரு  வினோத் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு கார்த்திக் ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து நமது சங்கத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தோம்.