Tuesday, April 26, 2022

தருமபுரி மாவட்ட செய்திகள்

 


25/04/2022 அன்று புதியதாக பொறுப்பேற்றுக்க் கொண்ட
 தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர் அய்யா அவர்களை
 நமது தருமபுரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக சந்தித்து பதவியேற்றுக்கொண்டதற்கான வாழ்த்துகளும்,தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. மேலும் தற்போது நடைபெற இருக்கும் 10 மற்றும்  12 ஆம் வகுப்பு  பொதுத்தேற்விற்கான அறை கண்காணிப்பாளர்களை அந்தந்த ஒன்றியத்திற்குள்ளே ஆசிரியர்களை பணியமர்த்தப்படும்போது அந்தந்த ஆசிரியர்களின் இருப்பிடத்தை கவனத்தில்கொண்டு பணியாணை வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அய்யா அவர்களும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து முடிந்தவவரை அவ்வாறு ப்ணியாணை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.அப்போது அய்யா அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.  மேலும் இந் இனிய நிகழ்வில் மாவட்டத் தலைவர்
திரு. சி.துரைசாமி மாநிலத்துணை தலைவர் திரு. முருகன் அய்யா,மாநில மகளிர் அணி இணை செயளாலர் திருமதி.சித்ரா மற்றும் கல்வி மாவட்டத் தலைவர்கள்
திரு. இராஜா,திரு. சதீஷ்குமார் மற்றும் பலர்
உடனிருந்தனர்.

No comments:

Post a Comment