Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts
Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts

Saturday, April 8, 2023

தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் - முழு விவரம்

 07-04-2023 அன்று திருவண்ணாமலையில் மாநில செயற்குழு கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. 

 மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் சிறப்புடன் பங்கேற்றுள்ளனர். 
தேசிய ஆசிரியர் சங்கத்தின் வளர்ச்சி குறித்து மாநிலத்தலைவர் திரு. ம.கோ திரிலோகச்சந்திரன் அவர்கள் விளக்கினார். 
நம் சங்கத்தின் இலக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி அய்யா மற்றும் மாநில பொருளாளர் திரு. இர.திருஞான குகன் ஆகியோர் விளக்கினார்.
மாநில மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி.ஸ்ரீ .சாருமதி தேவி அம்மையார் சங்கத்திற்கு மாத்ரு சக்தியின் அவசியம் குறித்தும் பெரும்பாலான ஆசிரியைகள் சங்கத்தில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
நம் தேசிய ஆசிரியர் சங்கத்திற்கென பிரத்தியேகமாக உள்ள whatsapp facebook, youtube, Blogspot & website ஊடகத்தை அனைத்து ஆசிரிய பெருமக்களும் பின் தொடருமாறு ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு. S. யுகபதி 

நிகழ்ச்சியை மாநிலத் துணைத்தலைவர் திரு. து முருகன் ஐயா அவர்கள் தொகுத்து வழங்கினார். செயலர் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சௌந்தர் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று அண்ணாமலையார் - உன்னாமுலை அம்மனின் தரிசனம் பெற்று மன நிறைவுடனும் சங்கத்தின் இலக்கை எட்ட வேண்டும் என்ற சங்கல்பத்துடன் அவரவர் இல்லங்களுக்கு பாதுகாப்புடன் சென்றடைந்தனர்.

மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

  • தேசிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றியமைக்கும், மற்றும் தனிதனித் துறைகளை ஓரே துறையாக ஒருங்கிணைத்தமைக்கம் தமிழக முதல்வருக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

  • கடந்த 27.12.22 அன்று பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தோம். அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி, எங்களை  போராட்ட களத்திற்கு இட்டுச் செல்லாமல் உடனடியாக பழைய பென்சன் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுகிறோம். 

  • மருத்துவர்களுக்கு இருப்பது போல பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றி, அதை உடனே அமல்படுத்தி, கட்டப்பட்டுள்ள ஆசிரியர் கரங்களை கட்டவிழ்த்து விட்டு, கல்வித் தரம் உயர, மாணவர்களின் ஒழுக்கச் சீர்கேடுகளை கட்டுக்குள் கொண்டுவரவும், போதை பொருள் நடமாட்டத்தை தமிழகத்தில் முற்றிலுமாக ஒழித்திடவும் வேண்டுகிறோம்.

  • மத்திய அரசைப் போலவே தடங்கலின்றி, தாமதமின்றி, அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். 

  • பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் ஆசிரியர்களுக்கு தேர்வு முடிவு ஆய்வு (RESULT ANALYSIS) என்ற பெயரில் நெருக்குதல் ஏற்படுத்தாமல் கல்வித் தரத்தையும் மாணவர் எண்ணிக்கையும் உயர்த்த ஒரு சேர கவனம் கொடுக்க வழிகாட்ட வேண்டுகிறோம். அதுவே மாணவர் இடைநிற்றலை தடுக்கும் என எமது சங்கம் கருதுகிறது. 

  • வரும் மே மாதத்திலேயே, புதிய பணியிடம்,  விருப்ப மறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து வித கலந்தாய்வுகளையும் நிறைவு செய்து வரும் கல்வி ஆண்டு பள்ளி திறக்கும் போதே காலிப்பணியிடம் ஏதுமின்றி இருக்க ஆவன செய்ய வேண்டும். 

  • கடந்த 12 ஆண்டுகளாக காத்திருக்கும் 12000 பகுதி நேர ஆசிரியர்களை தங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி கால முறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டுகிறோம்.

  • மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும் வினாத்தாள் மற்றும், விடைத்தாள் விலையில்லாமல் இலவசமாக வழங்க வேண்டுகிறோம்.

  • வரும் கல்வி ஆண்டு முதல் உயர் தொழில் நுட்ப ஆய்வு கூடம் முழு வீச்சில் பெரும்பாலான பள்ளிகளில் இயங்க உள்ளதால். அதற்கு தனியாக தகுதி பெற்ற கணிணி ஆய்வக உதவியாளரை அனைத்துப் பள்ளிக்கும் நியமிக்க வேண்டும். மேலும் காலியாக உள்ள இரவுக் காவலர், இளநிலை எழுத்தர் போன்ற பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 

  • போட்டிகள், ஆண்டு விழாக்கள் அனைத்தையும் அரையாண்டுக்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டும். அது மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த உதவியாக இருக்கும். 

  • ஜுனில் வெளியாகும் மாநிலக் கல்வி கொள்கைக்காக ஆவலாக காத்திருக்கிறோம். மாநில, தேசியக் கல்விக் கொள்கைகளில் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆய்வு செய்து மற்ற மாநிலங்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் ஈடாக நம் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த உடனே அமல் படுத்த வேண்டுகிறோம்..

  • உருது பள்ளிகள், மாநில எல்லையில் உள்ள பள்ளிகளின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

  • அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேர்வில் விலக்கு அளித்தது போலவே, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தகுதி தேர்விலிருந்து (TET) விலக்களித்து பாதிக்கப்பட்ட 1500 ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட ஆவன செய்ய வேண்டுகிறோம்.

  • இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதற்கு அமைக்கப்பட்ட குழுவிற்கு கால நிர்ணயம் செய்து உடனடியாக முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். 

  • OutSourcing முறையில் கல்வித் துறையில் பணியாளர் நியமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். 


















Thursday, March 16, 2023

திருப்பூர் மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்க செயற்குழுக்கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.


திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த 11.3.2023 மற்றும் 12.3.2023 ஆகிய இரண்டு நாட்கள், மறையூர்  அருகில் உள்ள காந்தளூரில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.


இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


1. சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனே இரத்து செய்து பழைய ஊதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.


 2.ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் உடனே தாமதமின்றி இயற்றப்பட வேண்டும்.


3. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் உடனே செய்ய வேண்டும்.


4. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பைப் பழையபடி தந்து,  தடையை  இரத்து செய்ய வேண்டும்.


5.பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வுகளை  ஒளிவுமறைவின்றி மே மாதத்துக்குள் முடித்து  கல்வியாண்டு முதல்நாள் முதலே கற்பித்தல் பணி பாதிப்பின்றி செயல்பட ஆவன செய்ய வேண்டும்.


6. உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை இரத்து செய்து பழையபடி வழங்க வேண்டும்.


  7.இடைநிலை ஆசிரியர்களின் ஆறாவது ஊதிய குழு ஊதிய மாறுபாடு சரி செய்யப்பட வேண்டும்.


8.மூத்தோர் -இளையோர் ஊதிய முரண்பாடுகளைக் களையும் வண்ணம் உரிய செயல்முறைகள் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். 


9.மத்திய அரசு வழங்கிய படி அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்காமல்   நிலுவைத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனே வழங்கிட வேண்டும்.


இக்கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர்கள் மகேந்திரன், சுரேஷ்பாபு, விஜயகுமார், உடுமலை வட்டாரத் தலைவர் மகேஷ்வரன், உடுமலை வட்டாரச் செயலாளர் உமாசங்கர்,  உடுமலை வட்டாரத் துணைச் செயலாளர் கதிர்வேலு, மாவட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார், அவிநாசி வட்டாரச் செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









































Sunday, February 12, 2023

ABRSM அகில இந்திய செயற்குழு கூட்டம் 2023

 உத்திரபிரதேசம் மாநிலம்.காசி நகரத்திற்கு அருகில் உள்ள சாரநாத் நகரத்தில்.ABRSM அகிலஇந்திய செயற்குழு (11/2/2023 -12/2/2023) நடைபெற்று வருகிறது. அதில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக. மாநிலத் துணைத் தலைவர் திரு பா விஜய் மற்றும் மாநில இணை செயலாளர் திரு.S.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

செயற்குழுவில் தமிழக ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான

 1.பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவதை பற்றி கோரிக்கை வைக்கப்பட்டது.

 2.தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்த்திட மேலும் இரண்டு மத்திய தமிழ் பல்கலைக்கழகங்கள். மதுரை மற்றும் கோவையில் நிறுவ கோரிக்கை வைக்கப்பட்டது. 


3.தமிழகத்திலே நவோதயா பள்ளிகள் துவங்க வேண்டும்.   

 

   4.ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம்


 5.தமிழகத்தின் அனைத்து பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின்  கீழ் கொண்டு வருதல்.


 6.வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் கற்க ஆவன செய்தல். 

7.திருக்குறள் மற்றும் பாரதியாரின் கவிதைகளை தேசிய மயமாக்கி அனைத்து மாணவர்களும் கற்க ஆவன செய்தல்.


 8.தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டுதல்.


 9.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருமான வரி கழிவில்சேமிப்புத் தொகை வரம்பை ரூபாய் 1,50,000 இருந்து மூன்று லட்சமாக அதிகரித்தல் .இதன் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்பாடுவார்கள்.


 10.தமிழகத்தில் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியில் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்தல்


11.EMIS portal பணிக்கு தனியாக ஒரு அலுவலரை நியமித்து. ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணியை மட்டும் அளித்தல்.


 12.பகுதி நேர ஆசிரியர்களை  பணி நிரந்தரம் செய்தல்








Tuesday, December 20, 2022

கும்பகோணம் வட்டார செய்திகள்

18-12-2022

கும்பகோணத்தில் டெல்டா கோட்டத்திற்கான கூட்டம் நடந்தது. 4 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டம் பொறுப்பாளர்கள் இருவரும் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான ஆர்ப்பாட்ட கூட்டம் பற்றிய திட்டமிடல் நடந்தது.

திரு.ஆதலையூர் சூரியகுமார்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில இணைச் செயலாளர் கரூர் திரு.சி இராகவன் கூட்டப்பொருள் பற்றி எடுத்துரைத்தார்.





திண்டுக்கல் மாவட்ட செய்திகள்


வருகிற  டிசம்பர் 27 , 2022 அன்று வள்ளுவர் கோட்டம், சென்னையில் நமது சங்கத்தின் சார்பில் நடைபெறும் 

 தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற  மாதாந்திர கூட்டத்தில் நமது திண்டுக்கல் மாவட்டம்  சார்பாக திரளான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் படி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரையும் தொடர்பு கொண்டு பேசி சென்னைக்கு அழைத்து வந்து 

தேனி மாவட்டத்தில் நமது சங்கம் 

 தொடர்ந்து வளர்ந்து வருகிறது; 

 ஆசிரியர் நலனில் அக்கறை கொண்டு உள்ளது;

 மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு உள்ளது; 

 தேசத்தின் நலனில் என்றென்றும் அக்கறை கொண்டு உள்ளது 

என்று நிரூபிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 எனவே கலந்து கொள்ளும் ஆசிரியர் பெருமக்களின் பெயர்களை பொறுப்பாளர்கள் பதிந்து உறுதி செய்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


என்றும் தேசப் பணியில்


 *ஆறுமுகம்

மாவட்ட செயலாளர்,

திண்டுக்கல் மாவட்டம்

தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு




தருமபுரி மாவட்டக் கூட்டம்


வருகிற டிசம்பர் 27 , 2022 அன்று வள்ளுவர் கோட்டம், சென்னையில் நமது சங்கத்தின் சார்பில் நடைபெறும்  தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக தருமபுரியில் இன்று நடைபெற்ற  மாதாந்திர கூட்டத்தில் நமது தருமபுரி மாவட்டம்  சார்பாக திரளான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் படி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரையும் தொடர்பு கொண்டு பேசி சென்னைக்கு அழைத்து வந்து 

தருமபுரி மாவட்டத்தில் நமது சங்கம் 

 தொடர்ந்து வளர்ந்து வருகிறது; 

 ஆசிரியர், 

 மாணவர்கள், 

 தேசத்தின்  நலனில் என்றென்றும் அக்கறை கொண்டு உள்ளது

என்று நிரூபிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 எனவே கலந்து கொள்ளும் ஆசிரியர் பெருமக்களின் பெயர்களை பொறுப்பாளர்கள் பதிந்து உறுதி செய்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 இப்படிக்கு

 M.காமராஜ்

 மாவட்ட தலைவர் 

தேசிய ஆசிரியர் சங்கம், தருமபுரி.



ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் கிளை துவக்க விழா !!!

  ஈரோடு மாவட்ட பொருளாளர் சண்முக ராஜுலு  தலைமையில் நடந்தது சிக்கஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜடேஸ்வாமி  முன்னிலை வகித்தார்.துவக்க விழாவில்  40 ஆசிரியர்கள் தங்களை தேசிய ஆசிரியர் சங்கத்தில் இணைத்துக்கொண்டனர்  மாநில பொருளாளர் திருஞான குகன், மாவட்ட ஊடகச் செயலாளர் நவநீதன், ஈரோடு கல்வி மாவட்டம் (தொடக்கக் கல்வி) பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்  தாளவாடி பகுதிகளில் மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆசிரியர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் கருத்துக்களை எடுத்துரைத்து மும் மொழிக் கொள்கை  வந்தால் மட்டுமே தீர்வு என கோரினர்   பொதுச்செயலாளர் கந்தசாமி கோரிக்கைகளை நிறைவேற்ற செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார் . 

  வரும் 27 ந்தேதி சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர்  நிறைவாக தாளவாடி ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்  தாளவாடி ஓன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் அனைவருக்கும் நன்றி கூறினார்.







Wednesday, December 14, 2022

14/12/2022




தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்குழு -உயர்மட்டக் குழு 

கருத்துக் கேட்பு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது அதில்தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு  சார்பில் மாநில துணைத் தலைவர் விஜய் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பூங்குழலி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களாவது 

  

* *குறைந்த பட்சம் 5 வது வகுப்பு வரை இயன்றால்  8 ம் வகுப்பு வரை தாய்மொழி வழியில் மட்டுமே கற்பிக்க வேண்டும்*


*மும் மொழிக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்*


*அண்டை மாநிலங்களில் தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*

*வளர்ந்து வரும் துறைகளின் அறிவைப்பெற 9 ம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும்*


 

*மொத்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 30% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்*


*போட்டித் தேர்வுகள் இந்திய அளவில் நடைபெறுவதால் NCERT பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதில் தமிழக விழுமியங்களை சேர்க்க வேண்டும்*

*தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடக்கக்கல்வி துறையின் கீழ் நடத்த வேண்டும்*

   

*மெக்காலே கல்வி முறையை மாற்றி இந்திய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்*


*விளையாட்டு, நீதி நூல்கள் படித்தல் ஆகியவற்றை தேர்வுடன் கூடிய பாடமாக வைக்க வேண்டும்*


*ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மட்டுமே கவனிக்கும் வகையில் பிற பணிகளுக்கு தகுந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்*

 

*முன்கூட்டியே திட்டமிட்டு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை  தேர்வு செய்து காலிப்பணியிடங்களையும் தேவைப்பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்ப வேண்டும்* 


என்பது போன்ற பல கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது 


மு. கந்தசாமி 

மாநில பொதுச்செயலாளர் 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

Click Here to more details


Thursday, December 8, 2022

பள்ளிக்கல்வியை பாதுகாக்க தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

நாள் : 27-12-2022  செவ்வாய்க்கிழமை
இடம் : வள்ளுவர் கோட்டம்சென்னை
நேரம் : மதியம் 2:00 மணி முதல் 5:00  மணி வரை



ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்று

மாணவர்களிடையே போதைப் பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வழிகாட்டு நடைமுறைகளை உடனடியாக வெளியிடுக

 பணி நிறைவு பெற்ற பின் வாழ்வாதாரம் காக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்து

கோட்டத்தில் ஒலிக்கும் குரல்

கோட்டையில் எதிரொலிக்கட்டும்

.கோ.திரிலோகசந்திரன்         மு.கந்தசாமி

      மாநிலத்தலைவர்                    பொதுச்செயலாளர்

நிறைவேற்றக் கோரும் மற்ற கோரிக்கைகள்

1. அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்குக் குழுக் காப்பீடு திட்டம் துவக்க          வேண்டும்.

2.  அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப தேவையான அளவு வகுப்பறைகள், கழிப்பறைகள் ,தண்ணீர் வசதி, நூலகம், அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

3. மாணவர்கள் கற்றல் அடைவுகளில் பின்தங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலையிலும் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என நிர்ணயம் செய்து அதற்கான ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல் அப்பணியிடங்களை நிரந்தரமாக காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

4.  உலகத் தரத்திலான கல்வி வளர்ச்சியை அடைய பள்ளிக்கல்வித்துறை நிதியை மொத்த GDP யில் 6% ஒதுக்க வேண்டும்

5. மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மும்மொழிக் கல்வித் திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தி மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

6. ஆசிரியர்களைக் கல்வி சாராத நிர்வாக ரீதியாக பணிகளில் ஈடுபடுத்துவதை முற்றிலும் தவிர்த்துக் கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

7. ஊக்க ஊதிய உயர்வு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை 2020க்கு முன்பிருந்த நிலை முறையில் வழங்க வேண்டும்.

8. அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கியது போல் ஜூலை 2022 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும்.

9. தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பதும் நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் தகுதி பெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்களில் தகுதி பெற்றவர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 10% வழங்க வேண்டும்

10.  01-06-2009 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்ய வேண்டும்.

11. கள்ளர் பள்ளிகளில் இருந்தும் பள்ளிக் கல்வித்துறையில் இருந்தும் அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்குத் தடையின்மை சான்று  அனைவருக்கும் வழங்க வேண்டும்.

12. ஆசிரியர் பயிற்றுர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த பணிமாறுதலின் படி தொடர்ந்து 500 ஆசிரியர் பயிற்றுநர்களைப் பள்ளிகளுககு மாறுதல் அளிக்க வேண்டும்.

13. பகுதி நேர ஆசிரியர்களை முறையான கால ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


Thursday, November 17, 2022

Kallakuruchi District Association News

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேசிய ஆசிரியர் சங்கம் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஆ.புத்தந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை 14.11.2022 அன்று மாலை 4.10 மணியிலிருந்து 5.00 மணி வரை வினாடி வினா நடத்தி கொண்டாடியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.P. திருமலை குமார் M.Sc.,B.Ed., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .
கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.பொ.இராமச்சந்திரன் M.A., M.Phil., B.Ed.,முதுகலை ஆசிரியர் ( வரலாறு) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளையும் வாழ்த்துகளையும் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு.சி.தர்மலிங்கம் M.Sc.,M.Ed.,அவர்கள் வினாடி வினாவினை நெறியளராக இருந்து சிறப்பாக நடத்தினார் .
இந்த வினாடி வினாவில் மூன்று அணிகள் பங்கு கொண்டன. 
அணிக்கு நான்கு மாணவர்கள்.
இயற்பியல் சுற்று 
வேதியல் சுற்று
 உயிரியல் சுற்று 
வரலாறு சுற்று 
புவியியல் சுற்று என
 ஐந்து சுற்றுகள்
 ஒரு சுற்றுக்கு இரண்டு வினாக்கள் 
ஒரு வினாவிற்கு 10 மதிப்பெண்கள் .
A அணி மாணவிகள்
1.ஜெ.ஸ்ரேயா
2.கி.தனுஷ்யா
3.வ.வாசுகி
4.க.ஷாலினி
B அணி மாணவிகள்
1.செ.ஜனகப்பிரியா
2.ப.காவியா
3.ர.லாவண்யா
4.சி.ஷர்மிளா
C அணி மாணவிகள் 
1.பி.ஷாலினி
2.ஜ.காவியா
3.கு.கிருஷ்ண வேணி
4.மு.புவனேஸ்வரி 
வினாடி வினா முடிவில்
 C அணியைச் சார்ந்த மாணவிகள் 95 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தனர் .
A அணியைச் சார்ந்த மாணவிகள் 70 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர் .
B அணியைச் சார்ந்த மாணவிகள் 50 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர். 


முதலிடம் பிடித்த C அணியைச் சார்ந்த நான்கு மாணவிகளுக்கும் தலா 300 ரூபாய் பரிசுத் தொகை ,வெற்றி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் தலைமையாசிரியர் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது .


இரண்டாமிடம் பிடித்த A அணியைச் சார்ந்த நான்கு மாணவிகளுக்கும் தலா 200 ரூபாய் பரிசுத் தொகை ,வெற்றி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் தலைமையாசிரியர் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது .



மூன்றாமிடம் பிடித்த B அணியைச் சார்ந்த நான்கு மாணவிகளுக்கும் தலா 100 ரூபாய் பரிசுத் தொகை ,வெற்றி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் தலைமையாசிரியர் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது .

கணித பட்டதாரி ஆசிரியர் பாரதிதாசன் அவர்கள் நன்றியுரை கூற குழந்தைகள் தின வினாடி வினா இனிதே நிறைவுற்றது
.







Saturday, September 17, 2022

மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள் - 2022

             தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு

மாநிலப் பொதுக் குழுக் கூட்டம்  SEP 2022

கரூர்


மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் :


1.தமிழக மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும், வருங்கால இந்தியாவை வலிமையான நாடாக முன்னேற்றம் அடையச் செய்யவும் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

2. தமிழக ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் தரமான தேசிய அளவிலான கல்வியைப் பெறுவதற்காக குறைந்த கட்டணத்தில் செயல்படும் நவோதயா பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி என்ற வீதம் தமிழகம் முழுவதும் துவக்க அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.

 

 

3.அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான குழுக் காப்பீட்டு திட்டத்தைத் தமிழக அரசு துவக்கிட வேண்டும்.

 

 

4. மாணவர்கள் எழுதக்கூடிய அனைத்து விதமான தேர்வுகளுக்கும் உரிய வினாத்தாள் கட்டணம் முற்றிலும் இரத்து செய்யப்பட வேண்டும்.

 

5.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை அதிகரிக்கும் வகையில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

 

ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் :

 

1.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

2.ஊக்க ஊதிய நிறுத்தம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணமாக்கல் இரத்து தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் முழுவதும் இரத்து செய்து பழைய முறையிலேயே ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் மற்றும் EL Surender  அளிக்கப்பட வேண்டும்.

 

3. அரசுப்பள்ளி அசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான அகவிலைப்பபடி ஜனவரி 2022 முதல் நிலுவைத் தொகையாக வழங்கப்பட வேண்டும்.

 

4.சிறுபான்மையற்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக  பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  (TET)    எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அவர்களுக்கு உரிய ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதியங்களை அனுமதித்து பணி வரன்முறை செய்வதற்கான அரசாணையினை தமிழக அரசு பிறப்பிக்கப்பட வேண்டும்.

 

5.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் 01.06.2009 க்குப் பிறகு

 பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினையும் சரி செய்ய வேண்டும்.

 

6.பகுதி நேர ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்து அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

 

7. ஆசிரியர் பயிற்றுனருக்கு வழங்கப்படும் நிலையான பயணப்படி ரூ 900 /-ஐ ரூ 2000 / - மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

 

 8. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 10% இடஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.