Thursday, March 16, 2023

திருப்பூர் மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்க செயற்குழுக்கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.


திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த 11.3.2023 மற்றும் 12.3.2023 ஆகிய இரண்டு நாட்கள், மறையூர்  அருகில் உள்ள காந்தளூரில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.


இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


1. சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனே இரத்து செய்து பழைய ஊதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.


 2.ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் உடனே தாமதமின்றி இயற்றப்பட வேண்டும்.


3. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் உடனே செய்ய வேண்டும்.


4. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பைப் பழையபடி தந்து,  தடையை  இரத்து செய்ய வேண்டும்.


5.பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வுகளை  ஒளிவுமறைவின்றி மே மாதத்துக்குள் முடித்து  கல்வியாண்டு முதல்நாள் முதலே கற்பித்தல் பணி பாதிப்பின்றி செயல்பட ஆவன செய்ய வேண்டும்.


6. உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை இரத்து செய்து பழையபடி வழங்க வேண்டும்.


  7.இடைநிலை ஆசிரியர்களின் ஆறாவது ஊதிய குழு ஊதிய மாறுபாடு சரி செய்யப்பட வேண்டும்.


8.மூத்தோர் -இளையோர் ஊதிய முரண்பாடுகளைக் களையும் வண்ணம் உரிய செயல்முறைகள் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். 


9.மத்திய அரசு வழங்கிய படி அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்காமல்   நிலுவைத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனே வழங்கிட வேண்டும்.


இக்கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர்கள் மகேந்திரன், சுரேஷ்பாபு, விஜயகுமார், உடுமலை வட்டாரத் தலைவர் மகேஷ்வரன், உடுமலை வட்டாரச் செயலாளர் உமாசங்கர்,  உடுமலை வட்டாரத் துணைச் செயலாளர் கதிர்வேலு, மாவட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார், அவிநாசி வட்டாரச் செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









































No comments:

Post a Comment