Saturday, September 17, 2022

மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள் - 2022

             தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு

மாநிலப் பொதுக் குழுக் கூட்டம்  SEP 2022

கரூர்


மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் :


1.தமிழக மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும், வருங்கால இந்தியாவை வலிமையான நாடாக முன்னேற்றம் அடையச் செய்யவும் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

2. தமிழக ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் தரமான தேசிய அளவிலான கல்வியைப் பெறுவதற்காக குறைந்த கட்டணத்தில் செயல்படும் நவோதயா பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி என்ற வீதம் தமிழகம் முழுவதும் துவக்க அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.

 

 

3.அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான குழுக் காப்பீட்டு திட்டத்தைத் தமிழக அரசு துவக்கிட வேண்டும்.

 

 

4. மாணவர்கள் எழுதக்கூடிய அனைத்து விதமான தேர்வுகளுக்கும் உரிய வினாத்தாள் கட்டணம் முற்றிலும் இரத்து செய்யப்பட வேண்டும்.

 

5.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை அதிகரிக்கும் வகையில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

 

ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் :

 

1.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

2.ஊக்க ஊதிய நிறுத்தம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணமாக்கல் இரத்து தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் முழுவதும் இரத்து செய்து பழைய முறையிலேயே ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் மற்றும் EL Surender  அளிக்கப்பட வேண்டும்.

 

3. அரசுப்பள்ளி அசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான அகவிலைப்பபடி ஜனவரி 2022 முதல் நிலுவைத் தொகையாக வழங்கப்பட வேண்டும்.

 

4.சிறுபான்மையற்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக  பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  (TET)    எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அவர்களுக்கு உரிய ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதியங்களை அனுமதித்து பணி வரன்முறை செய்வதற்கான அரசாணையினை தமிழக அரசு பிறப்பிக்கப்பட வேண்டும்.

 

5.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் 01.06.2009 க்குப் பிறகு

 பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினையும் சரி செய்ய வேண்டும்.

 

6.பகுதி நேர ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்து அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

 

7. ஆசிரியர் பயிற்றுனருக்கு வழங்கப்படும் நிலையான பயணப்படி ரூ 900 /-ஐ ரூ 2000 / - மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

 

 8. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 10% இடஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.






No comments:

Post a Comment