Saturday, July 24, 2021

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேசிய ஆசிரியர் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் குரு வணக்கம் நிகழ்ச்சி இன்று காலை 10 மணி அளவில் பூங்காநகர் ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் 

திருமதி. S மலர்கொடி , திரு. N. பூபாலமுருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.பள்ளி ஆசிரியர்கள் சரஸ்வதி பாடல் பாடினர். கோட்ட செயலாளர் திரு. ம. சதீஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.


விழாவிற்கு மாவட்ட தலைவர் திரு. வெ. கதிரொளி தலைமை வகிக்க, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (HS) திருமதி S மலர்கொடி  முன்னிலை வகித்தார். முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (HSS)  

முனைவர் N. பூபாலமுருகன்  சிறப்புரை  ஆற்றினார். குருவின் முக்கியத்துவத்தை மிக அழகாக எடுத்துரைத்தார்.சிறப்பு அழைப்பாளராக தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.ம.கோ.திரிலோகசந்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.


மாவட்ட செயலாளர் திரு. நீலமேகன் தொகுத்து வழங்கி விழாவில் கலந்துகொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கூறினார்.






No comments:

Post a Comment