Saturday, July 24, 2021

தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் குரு வணக்கம் (குருபூர்ணிமா) நிகழ்ச்சி

தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் குரு வணக்கம் (குருபூர்ணிமா) நிகழ்ச்சி இன்று (24.07.2021, சனிக்கிழமை) காலை 11 மணியளவில், வெள்ளகோவில், அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில் வளாகத்திலுள்ள சேக்கிழார் அரங்கத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சைவ சித்தாந்தப் பேராசிரியர் திரு.சுவாமிநாதன் அவர்கள் தலைமை வகித்தார்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியை திருமதி.மகேஸ்வரி அவர்கள் குத்து விளக்கேற்றினார். இறைவணக்கம் பட்டதாரி ஆசிரியை திருமதி.ரேவதி பாடினார்.



வரவேற்புரையினைத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் திரு.சிவக்குமார் அவர்கள் கூறினார். வெள்ளகோவில், சோழீஸ்வரா நூற்பாலையின் நிர்வாக இயக்குநர் திரு.திருநாவுக்கரசு மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு.சண்முகசுந்தரம் ஆகியோர் குருபூர்ணிமா தொடர்பான சிறப்புரையினை வழங்கினர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.கந்தசாமி மற்றும் மாநிலத் துணைத்தலைவர் "மாநில நல்லாசிரியர்" திரு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அலங்கரிக்கப்பட்ட பாரத மாதா, சரஸ்வதி மற்றும் வியாச முனிவர் திருவுருவப் படங்களுக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செய்தனர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் திரு.குமார் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் திரு.தண்டபாணி, மாவட்டப் பொருளாளர் திரு.பிரபு, மாவட்ட இணைச் செயலாளர் திரு.கோபாலகிருஷ்ணன், மாநில இணைச் செயலாளர் திரு.ராகவன், மாவட்ட இணைச் செயலாளர் திரு.பிரபாகரன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் திரு.ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் திருமதி.கலையரசி, திரு.தங்கவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



1 comment: