Saturday, September 6, 2025

KARNATAKA TET GO

 உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று , Supreme Court ன் 01-09-2025 அன்று வெளியான TET தீர்ப்புக்கு பிறகு கர்நாடக மாநிலத்தின் பள்ளி கல்வித்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TET தேர்ச்சி பெற்றால் ஒரு increment வழங்கவும் உத்தரவு.

KARNATAKA TET GO AS PER SCI JUDGEMENT.pdf

Download here


Wednesday, September 3, 2025

TET ISSUE

 ✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾

TET தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்க, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!!

DOWNLOAD 



TNTET STUDY MATERIAL 2025!!!

 TNTET PAPER II


இயற்பியல் - CLICK HERE 

வேதியியல் - CLICK HERE

உயிரியல் - CLICK HERE 

கல்வி உளவியல் - CLICK HERE 

கணிதம் - CLICK HERE 

ஆங்கிலம் - CLICK HERE 

தமிழ் - CLICK HERE 

கற்கும் குழந்தை - CLICK HERE 




Saturday, August 30, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்!!!

 இன்று 30.08.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாநில ஊடகப் பிரிவு செயலாளர் திரு. யுகபதி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 

இந்த இனிய நிகழ்வு மாநில இணைச் செயலாளர் கதிர்வேல் இல்லத்தில் நடைபெற்றது.

 மாவட்ட தலைவர் திரு. ராமச்சந்திரன் , மாவட்டச் செயலாளர் திரு . தர்மலிங்கம், மாவட்ட பொருளாளர் திரு. கோவிந்தன் மாவட்ட துணைத் தலைவர் திரு. லோக நாராயணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. தியாகராஜன் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நம் சங்க செயல்பாடுகள், சேவா காரியங்கள், பொதுக்குழு, மாதம் ஒரு முறை சந்திப்பு, மூன்று சங்க நிகழ்ச்சிகள் நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டிற்கான சந்தா இலக்கு, அனைத்து ஒன்றியங்களிலும் நம் சங்க உறுப்பினர்கள் இருப்பதை உறுதிப்படுத்துதல். ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.




ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு!!!

 DOWNLOAD 

Thursday, August 21, 2025

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 21.8.25 வியாழன் மாலை 6 மணி அளவில் பாரதிதாசன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாரியப்பன் - வேதவல்லி நினைவு பயிலகத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக குரு வந்தன நிகழ்வு குத்து விளக்கு ஏற்றப்பட்டு சரஸ்வதி வணக்கத்துடன் சிறப்பாக துவங்கப்பட்டது.மாரியப்பன் வேதவல்லி இலவசபயிலகத்தின் நிறுவனர் திரு. தமிழரசன் அவர் தலைமை தாங்கினார்.தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு கணேசன் வரவேற்புரை ஆற்றினார் மதுரை மாவட்டத்தில் உறுப்பினர் திரு. செல்லப்பாண்டி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். தமிழரசன் அவர்கள் தலைமை உரையாற்றினார் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர்.திரு.சா பரமசிவம் நிறைவுரை யாற்றினார். நிகழ்வில் பேசிய அனைவரும் ஆசிரியர்கள் 💯 முக்கியத்துவம் மாணவர்களுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு ஆசிரியரின் பங்கு இந்திய கலாச்சாரத்தில் சிறந்த ஆசிரியர்கள்  எவ்வாறெல்லாம் தங்களுடைய மாணவர்களை வாழ்க்கையில் வெற்றி பாதையில் மாற்றினார்கள் என்பது எடுத்துக் கூறினார்கள்.இலவச பயிற்சி மையத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் அனைவருக்கும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி புத்தகம் பரிசளிக்கப்பட்டது.நிறுவனத் தலைவர் திரு தமிழரசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பொன்னாடை மற்றும் புத்தகம் பரிசாக அளிக்கப்பட்டது.இலவச பயிலகத்தில் சிறப்பாக பயிலக்கூடிய மாணவ கண்மணிகளுக்கு, தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.நாட்டுப் பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.நிகழ்வு 40 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.












.


Friday, August 15, 2025

தருமபுரி மாவட்ட செய்திகள்!!!

 இன்று 15.08. 2025 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஒசஅள்ளிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசத்தின் 79வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் ஊர் பொதுமக்கள் ஆசிரியர்கள் பெரும்பாலோர் கலந்து கொண்டனர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் பசுமைத் தமிழகம் திட்டத்தின் படி சுப்பிரமணிய சிவா கிரிக்கெட் குழுவினரின் அன்பளிப்புடன் பள்ளி மாணவர்களுக்கு 80 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









Wednesday, August 13, 2025

கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்!!!

 அனைவருக்கும் வணக்கம் 

 தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் திரு சணல் ராம் அவர்களுக்கு சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு பெற்றமைக்கு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் அன்பு சங்கம் சார்பாகவும், 

 தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாகவும் சிறப்பு செய்யப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ,

இங்கனம்,

 திருமதி சித்ரா பாலசுப்ரமணியன் 

தலைவர் 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம்.





மாணவிகளுக்கான இணையப் பாதுகாப்பு வழிகாட்டி சிற்றேடு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!!!

 DOWNLOAD