தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு
சார்பில் இன்று (08.04.2026) சென்னையில் TRB செயலாளர் திரு இராமேஸ்வர முருகன் அவர்களை சந்தித்து பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர்களுக்கு EMIS ID உருவாக்கப்படாததாலும், பல மாவட்ட ஆசிரியர்கள் பணிச்சான்று பெற இயலாத நிலை உள்ளதையும் தெரிவித்து TET தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாளை நீட்டிக்க கோரினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பள்ளிக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன் அவர்களை சந்தித்து நமது TET தேர்வு பயிற்சிக்கு வாழ்த்துரை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தோம்.
மேலும் சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் TET தேர்வு முடித்த, முடிக்காத ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஆண்டு ஊதியம் வழங்க வேண்டும் என கூறிய உடன் அனைத்து ஆசிரியர்களும் பணியேற்ற நாள் முதல் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதி உடையவர்கள் என தெரிவித்ததோடு,முதன்மைக்கல்வி அலுவலர்கள் WhatsApp குழுவில் இது குறித்து பதிவிடுவதாகவும் நம் முன்னிலையிலேயே ஒரு முதன்மைக்கல்வி அலுவலரிடம் அலைபேசியில் பேசி உத்தரவு பிறப்பித்தார்.
தொடக்கக்கல்வி இயக்குநர் திரு. நரேஷ் அவர்களை சந்தித்து ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றிய ஆசிரியர்கள் ஊதியம் குறித்து பேசப்பட்டது.
M.Phil தணிக்கை தடை சார்ந்து தணிக்கை தடை அலுவலரை சந்தித்து ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் தணிக்கை தடைகளை நீக்க கோரினோம். உடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநிலத்தலைவர் திரு. திரிலோகசந்திரன் , பொதுச்செயலாளர் திரு. கந்தசாமி, தலைமை நிலைய செயலாளர் திரு இராமச்சந்திர குமார், சென்னை மாவட்ட பொறுப்பாளர் திரு ஜெயவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.



No comments:
Post a Comment