Wednesday, April 8, 2026

An Appeal

 







TET தேர்வு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளினை நீட்டிக்க வேண்டி ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!!

பெறுநர்                                                                                                   

செயலாளர் அவர்கள்,
ஆசிரியர் தேர்வு வாரியம்,
சென்னை.

வணக்கம். 

தமிழ்நாட்டில், பணிபுரியக்கூடிய ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்விற்கான அறிவிப்பினை, 13.02.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 10.04.2026 என குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்பட்டோர் நல விடுதிக்காப்பாளர்களுக்கு EMIS ID இன்னும் உருவாக்கப்படாததால் அவர்களால் பணிச்சான்று பெற இயலவில்லை. மேலும் பல மாவட்டக்கல்வி அலுவலகங்களில் பணிச்சான்று கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அச்சான்று வழங்கப்படாமல் உள்ளதாலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளினை மேலும் 10 வேலை நாட்கள் நீட்டிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி 
🙏🙏🙏🙏🙏🙏 

No comments:

Post a Comment