Monday, February 16, 2026

சென்னையில் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நம் சங்கத்தினர் சந்திப்பு!!!

 இன்று 16.02.2026 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சென்னையில் சந்தித்து அனைத்து . பிரிவு ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் 40% அதாவது 60 மதிப்பெண்ணை தேர்ச்சி யாக வைக்குமாறும்,

 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணியினை முறைப்படுத்தி அவர்களுக்கு உரித்தான பணப்பலன்கள் வழங்க ஆவன செய்ய கேட்டுக்கொண்டார்கள். இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் திரிலோக சந்திரன் மாநில பொதுச்செயலாளர் திரு கந்தசாமி, மாநில துணைத் தலைவர் திரு. முருகன்  மற்றும் மாநில ஊடகச் செயலாளர் திரு.யுகபதி ஆகியோர் பங்கேற்றனர்.




No comments:

Post a Comment