திருச்சிராப்பள்ளி
14.02.2026
இன்று 14.2.26 சனிக்கிழமை திருச்சியில் மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் அலுவலகத்தில் காலை 8 மணிஅளவில், நடந்து முடிந்த TNTET தேர்வு உட்பட நடைபெற இருக்கக்கூடிய அனைத்து விதமான TNTET தகுதி தேர்வுகளில் பொதுப் பிரிவினருக்கும், மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கும் மற்ற பிரிவினர்களுக்கு வழங்கிய சலுகை போன்று பொதுபிரிவினருக்கு 50 % மதிப்பெண்ணையும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு 40% மதிப்பெண்ணை தேர்ச்சி மதிப் பெண்ணாக நிர்ணயம் செய்து நடந்து முடிந்த தேர்வுகளில் மேற்கண்ட விகிதத்தில் தேர்ச்சி பெற்றோரின் திருத்திய புதிய பட்டியலை வெளியிட கோரியும் வருகின்ற அனைத்து TNTET தேர்வுகளுக்கும் இதனையே நிர்ணயம் செய்து தேர்வு நடத்தவும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு, சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.கோரிக்கையை மிக கவனத்துடன் கேட்டறிந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விரைவில் இதற்கான தீர்வுகளை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. கந்தசாமி,மாநில மகளிரணி செயலாளர் திருமதி.
சாருமதிதேவி,மாநில இணைச்செயலாளர் திரு ராகவன்,மாநில ஊடக இணைச்செயலர் திரு.ஸ்ரீராம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக திருச்சி மாவட்ட தலைவர் திரு சாய் சுப்ரமணியம், மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம்,மதுரை மாவட்டத்தின் சார்பாக மதுரை மாவட்ட தலைவர் திரு சா.பரமசிவம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் திரு.மணிகண்டன். மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 20 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
மாநில ஊடகப்பிரிவு
தேசிய ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு













மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு TET தேர்வில் மதிப்பெண் தளர்வை வழங்கி மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுகிறேன்.
ReplyDelete