Saturday, June 29, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 13 !!!

அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் ,திருமோகூர் , மதுரை


திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.

இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகின்றன.
நம்மாழ்வார் இவ்வூர் கோயில் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்ற சுரனைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்,
காள மேகத்தை அன்றி மற்று ஒன்று இலம் கதியே

இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர்.





No comments:

Post a Comment