Saturday, January 20, 2024

திருப்பூர் மாவட்டச் செய்திகள்

திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் 20.1.2024 அன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் கடமை உணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டச் செயலாளர் வ. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் துணைத் தலைவர் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் க.பழனிச்சாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர்தம் சிறப்புரையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சகோதரத்துவம் மிக்க சமுதாயம் மலர வேண்டும் என்றும் பாரதம் இந்த உலகின் ஞான குருவாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்றும் மாணவர் சமுதாயம் அறச்சிந்தனை, தர்ம சிந்தனை மேலோங்கியதாக வளர வேண்டும் என்றும் அதற்காக இந்தக் கடமை உணர்வு தினத்தில் ஆசிரியர்கள் அலுவலர்கள் அனைவரும் ஒன்று கூடி தன் பொறுப்பை உணர்ந்து இடைவிடாது பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் ப.தண்டபாணி, கல்வி அலுவலர் அணிச் செயலாளர் குருமூர்த்தி, மகளிர் அணியில் இருந்து கற்பகம், ரம்யா ,கோகிலா , மாவட்ட இணைச் செயலாளர்கள் கோ.சுரேஷ், ரா. விஜயகுமார் சங்க உறுப்பினர்கள் தங்ககனி , சசிகுமார் ,செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்றி உரையை மாவட்டப் பொருளாளர் ரா.பிரபு அவர்கள் வழங்கினார்.






No comments:

Post a Comment