Friday, September 29, 2023

மாநில பொதுக்குழு கூட்டம் 29/09/2023

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள ஶ்ரீஅமிர்தா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் திரு முருகன் அவர்கள்  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சரஸ்வதி வந்தனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. IVL பள்ளியின் பொருளாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் திருவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு கேசவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.அமிர்தா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு மாதவ பாரதி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற இணை இயக்குனர் திரு  பாஸ்கர சேதுபதி அவர்கள் சங்க பொறுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி அவர்கள் பொதுக்குழு தீர்மானங்களை வாசித்தார். அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் ஆண்டு அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி அவர்கள் தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டின் வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் திரு திருஞானகுகன் அவர்கள் சமர்ப்பித்தார். மாநில மகளிர் அணி இணை செயலர் திருமதி புங்குழிலி அவர்கள் உரையாற்றினார்.நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாநில கோட்ட மாவட்ட பொறுப்பாளர்களும், மகளிர் அணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஈரோடு கோட்ட பொறுப்பாளர் திரு ஶ்ரீ ஹரி அவர்கள் நிரை உரை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் திரு சுந்தர கோபால் அவர்கள் நன்றி உரை வழங்கினார். மாநில  ஊடக இணை செயலர் திரு வா ஶ்ரீராம் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

பொதுக் குழு தீர்மானங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
















No comments:

Post a Comment