Pages

Friday, September 29, 2023

29/09/2023 மாநில பொதுக்குழு கூட்டம் தீர்மானங்கள்

 29.09.2023

தேசிய ஆசிரியர்  சங்க மாநிலப் பொதுக் குழு தீர்மானங்கள் – திருப்பத்தூர் 

1. மருத்துவ மற்றும், தொழில் கல்விப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். 

2. கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வகுப்பறைகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 1.8.2023 மாணவர் எண்ணிக்கைக்கு தக்கவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு,  கால முறை ஊதியத்தில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமனம், Outsourcing முறையில் பணியாளர் நியமனம் முற்றிலும் நிறுத்தப் பட வேண்டும். 

3. 6-12 வகுப்பு வரை பாடச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது. இது குறைக்கப்பட வேண்டும். அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் NCERT பாடத் திட்டத்தோடு தமிழ்நாட்டுப் பெருமைகளை  சேர்த்தாலே போதுமானதாக இருக்கும்

4. அனைவருக்கும் தரமான சமமான கல்வியை அடையும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையின் நல்ல கூறுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். 

5. பணிபாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

6. 2021 தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும். 

7. EMIS மற்றும் நலத் திட்டங்களை உள்ளீடு செய்ய தனியே ஒரு நலத் திட்ட உதவியாளர் நியமிக்க வேண்டும். பல்வேறு பணிச் சுமையால் மன அழுத்தம் ஏற்பட்டு பல ஆசிரியர்கள் உயிரிழப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.  விருப்பப் பணி ஓய்வும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கற்றல் கற்பித்தல் பணியை மட்டுமே ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். 

8. எண்ணும் எழுத்தும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, குறைகளைக் களைந்து மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாற்ற வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் கூடுதல் பணிச் சுமை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்.  

9. 29.07.2011 க்கு முன் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்கள் 6-8 வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற TET தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்பதை உறுதியாக நிலைநிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

10. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கைக்கு வலு சேர்க்க 2009க்கு பிறகு நியமிக்கபட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.

11. 16.11.2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்று சிறுபான்மையற்ற நிதி உதவிப் பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்களுக்கு TET  தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்

12. நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, முன்பு நடைமுறையில் இருந்த உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். 

13.ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி விதிகள் வகுக்கப்பட வேண்டும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் ஆண்டுக்கு 500 ஆசிரியர்  பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்புவதை உடன் நிறைவேற்ற வேண்டும்

14. கணிணி பயிற்றுனர் நிலை 1 என்பதை முதுகலை ஆசிரியர் கணிணி அறிவியல் என பெயர் மாற்றம் செய்து ஆணை வெளியிட வேண்டும். 

15. கடந்த 12 ஆண்டுகளாக காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

16. இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைவதில் அரசாணைகளுக்கு முரணாக தேவையற்ற விவரங்களைக் கேட்பதைக் கைவிட்டு  விரைவாக உரிய ஆணைகளை வழங்க வேண்டும்.

17.தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி போதித்து வரும் 1600 சிறப்பு பயிற்றுநர்களை கால முறை ஊதியத்தில் பணியாற்றிட தமிழகஅரசு உத்தரவிட வேண்டும்.

18.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  10 சதவீதம் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.



No comments:

Post a Comment