Saturday, September 4, 2021

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

 குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்

அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே. - நன்னூல் 26

நல்லாசிரியர் இயல்பு :  

  • கொடை குணம் உடைய குலத்தில் பிறந்தவர்
  • இரக்கம் மற்றும் அன்பு காட்டும் அருள் உடையவர்
  • தெய்வத்தன்மை கொண்டவர்
  • கற்பிக்கும் கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்
  • மக்களில் மேம்பட்டவர்
  • பெருமை, திண்மை, தாங்கும் தன்மை ஆகியன கொண்ட நிலம் போன்ற பண்புள்ளவராய் மாணவரின் முயற்சிக்கு ஏற்பப் பலன் தருபவராதல்
  • மலை போல் அளக்கமுடியாத கல்விவளம், அசையாத் தன்மை, (மாணவன்) வறண்ட காலத்திலும் வழங்கும் தன்மை கொண்டவராதல்
  • துலாக்கோல் போல எல்லா மாணாக்கரையும் சமமாக நோக்குதல்
  • மலர் போல் அனைவருக்கும் மகிழ்வும் மணமும் தருதல்
  • உலகியல் அறிவு பெற்றிருத்தல்
  • உயர்குணம் உடைமை

ஆகிய பாங்குகளை உடையவர் நல்லாசிரியர் ஆவார்.

நல்ல ஆசிரியர்கள் இல்லாத சமுகம் நிச்சயம் நல்லதொரு சமுகமாக இருத்தல் இயலாது.

  இப்படிப்பட்ட நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறுவதில் தேசிய ஆசிரியர் சங்கம் பெருமை கொள்கிறது.





No comments:

Post a Comment