“மெய்யான குரு இறைவனே” என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அந்த இறைவனே கல்வி போதிக்கும் இடங்களுக்கெல்லாம், ஆசிரியர்களாகத் தோன்றி, அவர்கள் மூலம் கற்பித்து, சிறந்த சமுதாயத்தை உருவாக்குகிறார் என்பது சான்றோர் நம்பிக்கை.
இதையே "எழுத்தறிவித்தவன் இறைவன் " என்ற கூற்று உணர்த்துகின்றது.
தற்காலத்தில் ஆசிரியர்கள் பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைச் சிறப்பு பயிற்சிகளின் மூலம் பெற்றுவிடுகிறார்கள்.
அதையும் கடந்து மாணவர்களின் பன்முக ஆற்றலை, பண்பை, கலாச்சார ஈடுபாட்டை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு என்ன என்பதுதான் அடிப்படைக் கேள்வி, இன்றைய தேவை .
இதற்கான விடையில்தான் ஒரு நாட்டின் பெருமை, சிறப்பு,உலகின் அதன் நிலை,தரம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகின்றன.
நாடு நலம் பெற நல்லாசிரியர்கள் தேவை.அவர்கள் தேசமெனும் தேரின் சக்கரங்கள் லட்சியத்தை நோக்கி ஓட உதவும் அச்சாணிகள் .
"ஆசிரியர்களே அச்சாணிகள்" என்ற நூலில் இருந்து ஒரு பகுதி
நூல் தொகுப்பு : சுவாமி விமூர்த்தானந்தர்
வெளியீடு : ஸ்ரீராமகிருஷ்ண மடம் , மயிலாப்பூர் , சென்னை - 4.
1. தேசிய ஆசிரியர் சங்க செயல்பாடுகள் - CLICK HERE
2. தேசிய ஆசிரியர் சங்கத்தில் இணைய -CLICK HERE
3. பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு -CLICK HERE
4. புதிய கல்விக் கொள்கை தமிழில் - CLICK HERE
5. Teacher Mutual Transfer Willing Forms - CLICK HERE
6. தேசிய ஆசிரியர் சங்கம் பற்றி அறிய - CLICK HERE
7.மாணவர்களுக்கான இணைய வழி வினா-வினா போட்டி - CLICK HERE
No comments:
Post a Comment