Sunday, July 25, 2021

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் - திண்டுக்கல் மாவட்டம்  சார்பாக இன்று (25.07.2021) 
குரு வணக்கம் நிகழ்வு காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி வந்தனத்துடன் துவங்கியது. 

மாவட்டத் தலைவர் திருமதி. வைரமணி வரவேற்புரையாற்றினார் ..காந்திஜி நடுநிலைப் பள்ளியின் நிர்வாகி திரு. பத்மநாபன் அவர்கள் தலைமை உரையாற்றினார் ,மேலும் வத்தலகுண்டு மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்   திருமதி. K.மாரியம்மாள் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் சமக்ர சிக்ஷா திண்டுக்கல் மாவட்ட  ஆசிரியர் பயிற்றுநர் திரு. சரவணகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் மாநிலத் துணைத் தலைவர்  திரு பா. விஜய் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. சாருமதி தேவி அவர்கள் குருவின் பெருமையை பற்றி சிறப்புரையாற்றினார். நிறைவாக நாட்டுப்பண் மற்றும் நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.. 






அழைப்பிதழ் - CLICK HERE


No comments:

Post a Comment