Sunday, July 11, 2021

கொரோனா 3-வது அலை எதிர்கொள்வது குறித்து தேசிய ஆசிரியர் சங்கம் ஆலோசனை

 தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில அளவிலான மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டம் (11.07.2021) இன்று காலை 10.30 மணி அளவில் துவங்கி சிறப்புடன் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் விஞ்ஞானிகளின் மற்றும் ICMR கணிப்பு படி கொரோனாவின்  மூன்றாவது அலை ஒரு வேளை ஏற்படும் பட்சத்தில்  அது குறித்த முன்னேற்பாடுகள்,  பொதுமக்களுக்கு செய்யவேண்டிய விழிப்புணர்வு  நிவாரணப்பணிகள் மற்றும் சேவைகள் எவ்வாறு செய்வது என்பது பற்றி விரிவாக திட்டமிட விவாதிக்கப்பட்டது. 

 


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா கால பொது முடக்கத்தால் கல்வியில் பின்னடைவு ஏற்படாதவாறு   கல்வித் தொலைக்காட்சி பற்றிய போதிய விழிப்புணர்வு மற்றும் ஊடகத்தின் வாயிலாக எளிதாக  கற்றல் - கற்பித்தல் பணி செய்தல் எவ்வாறு? என்ற கருத்துக்களும்,அவரவர் பகுதிகளில் சமூக இடைவெளி பின்பற்றி தன்னார்வலர் மூலம் கல்விப்பணி துவங்க உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  மேலும், நம் பாரதத்தின் சித்தாந்தமான ஆடி மாதம் வரும் குருபூர்ணிமா வை ஒட்டி  குருவணக்கம் நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது எனவும் இதன் மூலம் அறநெறி சார்ந்த பாரதீய கல்வி முறையின் அவசியம் உணரப்பட்டு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஆசிரியர் சமூகம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள  வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் 150 நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

 

மு.கந்தசாமி
பொதுச் செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு





No comments:

Post a Comment