Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts
Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts

Saturday, January 20, 2024

திருப்பூர் மாவட்டச் செய்திகள்

திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் 20.1.2024 அன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் கடமை உணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டச் செயலாளர் வ. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் துணைத் தலைவர் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் க.பழனிச்சாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர்தம் சிறப்புரையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சகோதரத்துவம் மிக்க சமுதாயம் மலர வேண்டும் என்றும் பாரதம் இந்த உலகின் ஞான குருவாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்றும் மாணவர் சமுதாயம் அறச்சிந்தனை, தர்ம சிந்தனை மேலோங்கியதாக வளர வேண்டும் என்றும் அதற்காக இந்தக் கடமை உணர்வு தினத்தில் ஆசிரியர்கள் அலுவலர்கள் அனைவரும் ஒன்று கூடி தன் பொறுப்பை உணர்ந்து இடைவிடாது பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் ப.தண்டபாணி, கல்வி அலுவலர் அணிச் செயலாளர் குருமூர்த்தி, மகளிர் அணியில் இருந்து கற்பகம், ரம்யா ,கோகிலா , மாவட்ட இணைச் செயலாளர்கள் கோ.சுரேஷ், ரா. விஜயகுமார் சங்க உறுப்பினர்கள் தங்ககனி , சசிகுமார் ,செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்றி உரையை மாவட்டப் பொருளாளர் ரா.பிரபு அவர்கள் வழங்கினார்.






Thursday, January 11, 2024

இராணிப்பேட்டை மாவட்ட செய்திகள்

 இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் (மேல்நிலை) , SSA மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு மாநிலத்தலைவர், இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர்களுடன் சென்று நமது சங்கத்தின் நாட்காட்டியை வழங்கினார்.




விழுப்புரம் மாவட்ட செய்திகள்

 























விழுப்புரம் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டியினை வழங்கிய நிகழ்வு...




Tuesday, January 9, 2024

செஞ்சி வட்டார செய்திகள்

 செஞ்சியில்
10 ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்கக் கோரிய 
தேசிய ஆசிரியர் சங்கம்


தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக

திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு 2024ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


2024ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


செஞ்சி பகுதியில் பணிபுரியும் பட்டதாரி ஆசியர்கள் நலன் கருதி எதிர்வரும் மார்ச் 2024 இல்

செஞ்சியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்கவும்,


அனைத்து தேர்வுப் பணிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும்,


NMMS , NTSE, TRUST, 

தமிழ் திறனாய்வுத்தேர்வு போன்ற தேர்வுகளுக்கு சுழற்சி முறையில் தேர்வுப்பணி அளிக்கவும்,

உரிய உழைப்பூதியங்களை உடனே வழங்கவும்


கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தேசிய ஆசிரியர் சங்கம்

விழுப்புரம் மாவட்டம்






கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

 இன்று(09-01-2024) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களையும் நேர்முக உதவியாளர் (மேல் நிலை) அவர்களையும் சந்திந்து நமது இயக்க நாட்காட்டி வழங்கப்பட்டது. இயக்கத்தின் சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம்.




இன்று(09-01-2024) கள்ளக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை சந்திந்து நமது இயக்க நாட்காட்டி வழங்கப்பட்டது. இயக்கத்தின் சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம்.*

சென்னை மாவட்ட செய்திகள்

இன்று 9.1.2024 தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநிலத்தலைவர்

கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.


தேசிய ஆசிரியர் சங்கம் மாநிலத் துணை தலைவர் திரு.முருகன்

மாநில இணைச் செயலாளர் திரு.தண்டபாணி

மாநில தலைமையிட செயலாளர் திரு வினோத்குமார்

இவர்களோடு இணைந்து

மாநில இணைச் செயலாளர் திரு இராகவன்

மாநில மகளிரணி செயலாளர் திருமதி சாருமதிதேவி

மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மூவருடன்

DPI வளாகத்தில் தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் இணை

இயக்குநர்களை சந்தித்து காலண்டர் மற்றும் தமிழ் புத்தாண்டு 

வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களை

சந்தித்து நாள்காட்டி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

தெரிவித்தோம். எழிலகம்  மாநில தலைவர் தலைமையில்

சென்று நாள்காட்டி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

தெரிவிக்கப்பட்டது.


இன்றைய நிகழ்வு மிகவும் 

ஆக்கப்பூர்வமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.





















தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு..

 



*தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு...*

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று (09.01.2024) சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளாகள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க கட்டடத்தில் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒங்கிணைப்பாளர் திரு.த.அமிர்தகுமார் தலைமையில் நடைபெற்றது. 


   இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களின் சார்பில் கலந்து கொண்டனர்.


புதிய பென்சன் திட்டத்தை இரத்து செய்து, ஏற்கனவே 01.04.2003 - க்கு முன்னர் நடைமுறையில் இருந்த பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துவது  உள்ளிட்ட பல்வேறு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.


  ஏராளமான துறைவாரிக் கோரிக்கைகளை பேசித் தீர்க்க தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வரும் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


கூட்ட முடிவில் கீழ்க்கண்ட போராட்ட முடிவுகள் தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன.


09.01.2024 கூட்ட முடிவுகள்


1).20.01.2024 மாவட்டங்களில் போராட்ட தயாரிப்பு கூட்டங்கள்


2).30.01.2024 அன்று மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.


3) 05.02.2024 முதல் 09.02.2024 வரை அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளிகளில், கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுப் பிரச்சார இயக்கம்..


4).15.02.2024 வியாழக்கிழமையன்று சென்னையில் பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம்..


5) 26/02/2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்..


  மேற்கண்ட போராட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உறுதியேற்றுக் கொண்ட பின்னர்....


இறுதியாக தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைமை நிலையச் செயலாளர் எம்.சண்முகம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

Wednesday, January 3, 2024

மதுரை மாவட்ட செய்திகள்

 இன்று (03/01/2024) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலக. ஊழியர்கள். மதுரை மாவட்ட கல்வி அலுவலக நேரடி உதவியாளர், அலுவலக பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை சந்தித்தும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் சந்தித்து நமது அமைப்பின் இந்த ஆண்டிற்கான நாள்காட்டி வழங்கப்பட்டது.















Saturday, October 7, 2023

சென்னை மாவட்ட செய்திகள்

 ABRSM இணைப்பு சங்கமாக செயல்படும் தமிழ்நாடு  உயர்கல்வி ஆசிரியர் சங்கத்தின் (THETA) சார்பில் சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில்  Unleashing Hanuman Within   தலைப்பிலான கருத்தரங்கில் ABRSM National Joint Organising Secretary Mr.LAKSHMAN  பேசினார்.
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் பொதுச்செயலாளர், துணைத் தலைவர், தலைமை நிலைய செயலாளர், சென்னை,காஞ்சிபுரம் மாவட்டங்களின்   தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.