Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts
Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts

Saturday, October 7, 2023

மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்

 பாரத நாட்டின் பாரம்பரிய கலை சின்னங்கள் ' என்ற தலைப்பில் கண்காட்சி மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீ கண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களால் நடத்தப்பட்டது.





Friday, September 29, 2023

General Body Meeting 29-09-2023

TO KNOW MORE DETAILS - CLICK HERE

Photo Folder



29/09/2023 மாநில பொதுக்குழு கூட்டம் தீர்மானங்கள்

 29.09.2023

தேசிய ஆசிரியர்  சங்க மாநிலப் பொதுக் குழு தீர்மானங்கள் – திருப்பத்தூர் 

1. மருத்துவ மற்றும், தொழில் கல்விப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். 

2. கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வகுப்பறைகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 1.8.2023 மாணவர் எண்ணிக்கைக்கு தக்கவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு,  கால முறை ஊதியத்தில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமனம், Outsourcing முறையில் பணியாளர் நியமனம் முற்றிலும் நிறுத்தப் பட வேண்டும். 

3. 6-12 வகுப்பு வரை பாடச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது. இது குறைக்கப்பட வேண்டும். அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் NCERT பாடத் திட்டத்தோடு தமிழ்நாட்டுப் பெருமைகளை  சேர்த்தாலே போதுமானதாக இருக்கும்

4. அனைவருக்கும் தரமான சமமான கல்வியை அடையும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையின் நல்ல கூறுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். 

5. பணிபாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

6. 2021 தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும். 

7. EMIS மற்றும் நலத் திட்டங்களை உள்ளீடு செய்ய தனியே ஒரு நலத் திட்ட உதவியாளர் நியமிக்க வேண்டும். பல்வேறு பணிச் சுமையால் மன அழுத்தம் ஏற்பட்டு பல ஆசிரியர்கள் உயிரிழப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.  விருப்பப் பணி ஓய்வும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கற்றல் கற்பித்தல் பணியை மட்டுமே ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். 

8. எண்ணும் எழுத்தும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, குறைகளைக் களைந்து மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாற்ற வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் கூடுதல் பணிச் சுமை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்.  

9. 29.07.2011 க்கு முன் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்கள் 6-8 வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற TET தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்பதை உறுதியாக நிலைநிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

10. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கைக்கு வலு சேர்க்க 2009க்கு பிறகு நியமிக்கபட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.

11. 16.11.2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்று சிறுபான்மையற்ற நிதி உதவிப் பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்களுக்கு TET  தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்

12. நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, முன்பு நடைமுறையில் இருந்த உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். 

13.ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி விதிகள் வகுக்கப்பட வேண்டும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் ஆண்டுக்கு 500 ஆசிரியர்  பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்புவதை உடன் நிறைவேற்ற வேண்டும்

14. கணிணி பயிற்றுனர் நிலை 1 என்பதை முதுகலை ஆசிரியர் கணிணி அறிவியல் என பெயர் மாற்றம் செய்து ஆணை வெளியிட வேண்டும். 

15. கடந்த 12 ஆண்டுகளாக காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

16. இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைவதில் அரசாணைகளுக்கு முரணாக தேவையற்ற விவரங்களைக் கேட்பதைக் கைவிட்டு  விரைவாக உரிய ஆணைகளை வழங்க வேண்டும்.

17.தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி போதித்து வரும் 1600 சிறப்பு பயிற்றுநர்களை கால முறை ஊதியத்தில் பணியாற்றிட தமிழகஅரசு உத்தரவிட வேண்டும்.

18.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  10 சதவீதம் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.



மாநில பொதுக்குழு கூட்டம் 29/09/2023

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள ஶ்ரீஅமிர்தா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் திரு முருகன் அவர்கள்  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சரஸ்வதி வந்தனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. IVL பள்ளியின் பொருளாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் திருவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு கேசவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.அமிர்தா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு மாதவ பாரதி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற இணை இயக்குனர் திரு  பாஸ்கர சேதுபதி அவர்கள் சங்க பொறுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி அவர்கள் பொதுக்குழு தீர்மானங்களை வாசித்தார். அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் ஆண்டு அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி அவர்கள் தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டின் வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் திரு திருஞானகுகன் அவர்கள் சமர்ப்பித்தார். மாநில மகளிர் அணி இணை செயலர் திருமதி புங்குழிலி அவர்கள் உரையாற்றினார்.நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாநில கோட்ட மாவட்ட பொறுப்பாளர்களும், மகளிர் அணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஈரோடு கோட்ட பொறுப்பாளர் திரு ஶ்ரீ ஹரி அவர்கள் நிரை உரை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் திரு சுந்தர கோபால் அவர்கள் நன்றி உரை வழங்கினார். மாநில  ஊடக இணை செயலர் திரு வா ஶ்ரீராம் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

பொதுக் குழு தீர்மானங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
















Wednesday, September 13, 2023

11,12வகுப்புகளுக்கு இனி வரும் காலங்களில் காலாண்டு அரையாண்டு தேர்வுகளை மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்தை இரு வகுப்புகளுக்கு வெவ்வேறு தேதிகளில் நடத்த திட்டமிட தேசிய ஆசிரியர் சங்கம் தேர்வுத்துறை இயக்குநருக்கு கடிதம்!!!

 


ஆசிரியர் இனத்தின் மீது அடுத்தடுத்த தாக்குதலா?

தேர்வு நிலைக்கு TET தேர்ச்சி அவசியமா?

தேசிய ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசு எந்த வித அரசாணையும் பிறப்பிக்காத நிலையில் ,நீதிமன்ற தீர்ப்பில் பதவி உயர்வுக்கு தான்  தகுதித்தேர்வு தேவை என்று மட்டும் கூறியுள்ள நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கோரியதை ஏற்று 22-6-23 இல் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  உறுதி அளித்தததற்கு மாறாக கூடுதலாக தன்னிச்சையாக  தேர்வு நிலை பெற ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி வேண்டும் எனச் சேர்த்த கோவை மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை தேசிய ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு இதர இனங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தேர்வு நிலை வழங்கி உத்தரவு வழங்க கோருகிறது......

மு‌ கந்தசாமி,

மாநில பொதுச்செயலாளர், 

தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு



Saturday, August 12, 2023

திருச்சிராப்பள்ளி மாவட்ட செயதிகள்

 அனைவருக்கும் வணக்கம். தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பில் இன்று (12/08/2023) திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குரு வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் வரவேற்புரை வழங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் திரு சாய் சுப்ரமணியம் அவர்கள் தலைமை வகித்தார். விழா பேருரையை தேசிய கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் வழங்கினார். வேத வியாசர் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு கூறுகளை அருமையாக எடுத்துரைத்தார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகளை மாநில மகளிர் அணி செயலர் திருமதி ஸ்ரீ சாருமாதேவி அவர்கள் எடுத்துரைத்தார். மாநில இணைச் செயலாளர்கள் திரு இராகவன் மற்றும் திரு ராஜகோபால் அவர்கள் உரையாற்றினர். நமது சங்கத்தின் ஊடக துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில ஊடக இணைச் செயலர் திரு வா ஶ்ரீராம் எடுத்துரைத்தார். ஆசிரியர் சங்கத்தின் முன்னோடி உறுப்பினர்கள் திரு இராமரத்தினம் மற்றும் திரு முரளி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கீதா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் சோமு அவர்கள் நன்றி கூறினார். திருச்சி மாவட்ட தலைவர் சாய் சுப்ரமணியன் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.




















Friday, August 11, 2023

திருச்சி குரு வணக்கம் -நிகழ்ச்சி நிரல்

 தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி

"குரு வணக்கம்"- நிகழ்ச்சி நிரல்

நாள்:12-08-2023 நேரம்: காலை 10.30 மணி

இடம்: தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி

(சத்திரம் பேருந்து நிலையம் அருகில்) 

திருச்சிராப்பள்ளி-2

      இறை வணக்கம்: திருமதி உஷா மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர்

      தமிழ்தாய் வாழ்த்து:திருமதி க.மல்லிகா மாவட்ட மகளிரணி தலைவி

     குத்து விளக்கு ஏற்றுதல் : திருமதி ந. ரேணுகா தேவி

வரவேற்புரை : ப. ஆறுமுகம் மாவட்டச் செயலாளர்

முன்னிலை : திரு சி இராகவன்

                           மாநில இணைச் செயலாளர்

                           திரு ரா. ராஜகோபாலன் 

                           மாநில இணைச் செயலாளர்

                          திருமதி  பூங்கொடி 

                          தலைமையாசிரியர்

                           தேவி நடுநிலைப்பள்ளி                                            திருவரங்கம். 

தலைமை :  திரு  நா. சாய் சுப்ரமணியன் மாவட்ட தலைவர். 

விழாப்பேரூரை : திரு கி. சீனிவாசன்

இயற்பியல் துறைத்தலைவர் (ஓய்வு) 

தேசிய கல்லூரி, திருச்சி. 

சிறப்புரை :  திருமதி ஶ்ரீசாருமதி தேவி மாநில மகளிரணி செயலாளர்

சங்க அறிமுகம் : திரு வா ஶ்ரீராம் மாநில ஊடக இணைச் செயலாளர்

தொகுப்புரை : திருமதி இரா கீதா மாவட்ட மகளிரணி செயலாளர்

நன்றியுரை : திரு வெ. சோமு 

 மாவட்ட பொருளாளர்

அழைப்பின் மகிழ்வில்

DAS TN - TRICHY 



Thursday, August 10, 2023

பழனி வட்டார செய்திகள்

 இன்று (10.08.2023) மாலை, பழனி மாவட்டக் கல்வி அலுவலராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திருமதி. பரிமளா அம்மா அவர்களை தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்திய நிகழ்வு..





Monday, August 7, 2023

ஆசிரியர்களின் அன்பான வேண்டுகோள் !!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்கள் சார்பாக கள்ளக்குறிச்சியில் உள்ள மாணவர்களுக்கான சிகை அலங்காரம் குறித்த ஒரு விழிப்புணர்வுக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து சலூன் கடை உரிமையாளர்களுக்கும் சிகை அலங்காரத்தில் சில குறிப்பான (CROSS,BOX , STYLE) சிகை அலங்காரங்களை தவிர்க்குமாறு ஒரு அன்பான வேண்டுகோள் வைத்து நோட்டீஸ் முடி திருத்துவோர் நல சங்க தலைவர்  திரு.சங்கர் அவர்களிடம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சார்பாக  மாவட்ட தலைவர்   திரு.பொ.இராமச்சந்திரன் அவர்களும், மாநில இணை செயலாளர் திரு.ச.கதிர்வேல் அவர்களும் வழங்கினார்கள்.






Thursday, August 3, 2023

Our Association Office Bearers with Honourable Parliament Members in NewDelhi !!!

பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருதல் , தமிழ்நாடு நிதி உதவி பள்ளிகளில் 16-11-2012  க்கு முன் வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் விலக்களிக்க  தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு நிர்வாகிகள் புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை !!!


இன்று 03/08/2023 தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் புதுடில்லியில் கல்வித்துறை சார்ந்த (தமிழகம் மற்றும் இந்தியா முழுவதற்குமான) கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு பாராளுமன்றத்தில் கோரிக்கைகளை எடுத்துரைத்து மத்திய/மாநில அரசுகளை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டுமென.தமிழக பாராளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை, பாராளுமன்ற வளாகத்தில், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் மாநில தலைவர் திரிலோகசந்திரன், மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, மாநில துணைத் தலைவர் முருகன், மாநில இணைச் செயலாளர் இராகவன் மற்றும் மாநில மகளிர் பிரிவு இணைச் செயலாளர் பூங்குழலி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

திரு. G.K வாசன், திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், திரு.Dr.செல்லக்குமார், திரு.அப்துல்லா திரு.தம்பிதுரை, திருமதி.கனிமொழி சோமு ஆகியோரையும் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் திரு L. முருகன் ஆகியோரையும் சந்தித்தனர். ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நாடுமுழுவதும் மீண்டும் கொண்டு வர வேண்டியும், நாடு முழுவதும்  அந்தந்த மாநிலங்களில்  நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும்  30,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு  TET தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் தமிழ்வழி நவோதயா பள்ளிகள் தொடங்கவேண்டும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.தமிழகத்தில் 2009 க்கு  பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்சனைகள்,இன்றைய சூழலில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் அவசியம் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நிதி அமைச்சர் அவர்களிடம் தனிநபருக்கான வருமானவரி விலக்கு ரூபாய் 7 லட்சம் (எந்த கழிவும் இல்லாமல்) ஆக உயர்த்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

தேசிய கல்விப்பணியில்

மு.கந்தசாமி

பொதுச்செயலாளர்










































Sunday, June 18, 2023

Haridwar Programme























   ஹரித்வார் புண்ணிய பூமியில் அகில பாரதிய ராஷ்டிரிய சைசிக் மகா சங்கத்தின் அகில பாரத கூட்டம் கடந்த 16/6/23 முதல் 18/6/23 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் முருகன் அவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைத்து குறிப்பாக *பழைய ஓய்வூதிய த் திட்டம்* கொண்டுவருதல் மற்றும் *நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு* பிரச்சனைக்கு விரைந்து உடனடி தீர்வு காண மத்திய/மாநில அரசுகளை வலியுறுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. 
  நன்றி.
x

Saturday, May 27, 2023

மாநில - மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரத்தில் நடைபெற்றது !!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி


தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி மற்றும் மாநில பொதுக்குழு 27.05.2023 மற்றும் 28.05.2023 ஆகிய இரண்டு நாட்கள் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இனிய நிகழ்வில் தவத்திரு சுவாமி.சைத்தன்யானந்த மகராஜ், வெள்ளிமலை அவர்கள் ஆசியுரை வழங்கினார். 


மேலும் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்புச் (ABRSM, New Delhi)  செயலாளர் ஸ்ரீ மகேந்திர கபூர் அவர்களும்  தேசிய இணை அமைப்பு  செயலாளர் ஸ்ரீ லஷ்மன்  ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர், நிகழ்வில் கன்னியாகுமரி தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் திரு ஜெய போஸ் அவர்கள் எழுதிய தெய்வப் புலவரின் தெய்வ தரிசனம் எனும் நூல் வெளியிடப்பட்டது.


 பொதுக்குழு கூட்டத்தில் ஆசிரியர் பணி பாதுகாப்பு,
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை  அமல்படுத்துதல்,
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல்,
மத்திய அரசு அறிவிக்கும் நாளிலிருந்து அகவிலைப்படி உயர்வு,
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,
உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு
போன்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிளை உடன் நிறைவேற்றுதல்
கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மற்றும் உருது போன்ற மொழி சிறுபான்மை மக்கள் பகுதிகளில் அவர்கள் தாய்மொழியை மூன்றாவது மொழியாக பயில ஆவன செய்தல்,

 மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமித்தல், 
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்தல்,
 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம்,
2004-2006 ல் பணி நியமன செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன் முறை செய்தல் போன்ற பல்வேறு ஆசிரியர் நலன், மாணவர்கள் நலன் மற்றும் பள்ளி நலன் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் திரு திருலோக சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் திரு கந்தசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.









இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.