Saturday, May 27, 2023

மாநில - மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரத்தில் நடைபெற்றது !!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி


தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி மற்றும் மாநில பொதுக்குழு 27.05.2023 மற்றும் 28.05.2023 ஆகிய இரண்டு நாட்கள் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இனிய நிகழ்வில் தவத்திரு சுவாமி.சைத்தன்யானந்த மகராஜ், வெள்ளிமலை அவர்கள் ஆசியுரை வழங்கினார். 


மேலும் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்புச் (ABRSM, New Delhi)  செயலாளர் ஸ்ரீ மகேந்திர கபூர் அவர்களும்  தேசிய இணை அமைப்பு  செயலாளர் ஸ்ரீ லஷ்மன்  ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர், நிகழ்வில் கன்னியாகுமரி தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் திரு ஜெய போஸ் அவர்கள் எழுதிய தெய்வப் புலவரின் தெய்வ தரிசனம் எனும் நூல் வெளியிடப்பட்டது.


 பொதுக்குழு கூட்டத்தில் ஆசிரியர் பணி பாதுகாப்பு,
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை  அமல்படுத்துதல்,
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல்,
மத்திய அரசு அறிவிக்கும் நாளிலிருந்து அகவிலைப்படி உயர்வு,
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,
உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு
போன்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிளை உடன் நிறைவேற்றுதல்
கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மற்றும் உருது போன்ற மொழி சிறுபான்மை மக்கள் பகுதிகளில் அவர்கள் தாய்மொழியை மூன்றாவது மொழியாக பயில ஆவன செய்தல்,

 மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமித்தல், 
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்தல்,
 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம்,
2004-2006 ல் பணி நியமன செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன் முறை செய்தல் போன்ற பல்வேறு ஆசிரியர் நலன், மாணவர்கள் நலன் மற்றும் பள்ளி நலன் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் திரு திருலோக சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் திரு கந்தசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.









இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.





No comments:

Post a Comment