Tuesday, February 17, 2026

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குநர்களுடன் TET தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பு சார்ந்து தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!!!

 சென்னை 17.02.2026

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் இன்று காலை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தலைமைச் செயலகத்தில் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர் அப்போது மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும் உடனிருந்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 40% தேர்ச்சி (60 மதிப்பெண்) என அனைவருக்கும் பொருந்துமாறு ஆணை வெளியிடக் கோரினோம். ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் OC பிரிவினர்களுக்கு 50% மற்றும் அனைத்து பிரிவு மகளிர்களுக்கும் தேர்ச்சி 60 மதிப்பெண்ணாகவும் PWD/SC/ST க்கு 40 மதிப்பெண் ஆக உள்ளதை சுட்டிக்காட்டினோம் இவ்வாணைகளை பரிசீலித்து தொடர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் பணப் பலன்கள் அனைத்தும் பெற தகுதி வாய்ந்தவர்கள் என்பதையும் கூறினார்கள்.  

தாளவாடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ் மதிப்பீடு கோரும் அரசாணை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக்கட்டில் ஆண்டு வளரூதிய நீட்டிப்பு கோரும் அரசாணை குறித்து நடவடிக்கை எடுத்து வரப்படுவதாக இயக்குனர் தெரிவித்தார்.

மேற்கண்ட நிகழ்வில் மாநிலத்தலைவர் திரிலோகச்சந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி ஊடகச் செயலாளர் யுகபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment