மாநில மைய சுற்றறிக்கை
""""""""'""""""""''""""""""""""""
அனைவருக்கும் வணக்கம்.
நமது போட்டா - ஜியோ பேரமைப்பின் சார்பில் இன்று 18.12.2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம்,சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைமை அலுவலக சங்க ச்கட்டடத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.த.அமிர்தகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் தவிர மற்ற அனைத்து சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதில்,இரண்டு கட்டப் போராட்டங்கள் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட மையங்களும் உடனடியாக 29.12.2025 அன்று நடைபெற உள்ள கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கான பணிகளை திட்டமிட்டு மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடத்துவதற்கு பணிகளை தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிருவாகிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அதைத்தொடர்ந்து O6.01.2026 அன்று முதல் நடைபெற உள்ள கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வது தொடர்பாக அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரங்களை மேற்கொள்ள உடனடியாக திட்டமிடுமாறும் மாநிலம் மையம் சார்பில் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
மாநில மையம்,
போட்டா - ஜியோ பேரமைப்பு.










No comments:
Post a Comment