SLAS Exam 2025 – Pattern of Selection of Students
💥 அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 4,5,6 பிப்ரவரி 25 ல் SLAS தேர்வானது 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது.
💥 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 20 மாணவர்களும் ( தமிழ் மீடியம் எனில் 20 மாணவர்களும், ஆங்கில வழி இருந்தால் தமிழ் வழி 10 + ஆங்கில வழி 10 மாணவர்களும்) தெரிவு செய்யப்படுவர்.
💥 8ஆம் வகுப்பில் 30 பேர் தேர்வு எழுதுவர்
💥 மாணவர்கள் தேர்வானது ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு EMIS ல் வரும். Absent இருந்தாலும் பதிலி EMISல் வரும்
💥 எனவே தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் EMISல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
💥தொடர்ந்து விடுப்பில் இருந்தாலோ, இடைநிற்றல் இருந்தாலோ Common Pool க்கு அனுப்பவும்
SLAS 2025 - OMR Sheet நிரப்பும் பொழுது கவனிக்க வேண்டியவை
மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுதவும்.
Black /Blue colour பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும்.
Ink pen / gel pen பயன்படுத்தக் கூடாது.
OMR - ஐ மடக்கவோ,கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.
தவறான விடைகளை Whitener / பிளேடு மூலம் திருத்தம் செய்ய முயற்சி செய்யக்கூடாது.
ஒரே வினாவிற்கு இரண்டு விடைகளை தேர்வு செய்யக் கூடாது
வரும் 04.02.2025 அன்று 3 ம் வகுப்பிற்கும் ,
05.02.2025 அன்று 5ம் வகுப்பிற்கும்
மற்றும்
06.02.2025 அன்று 8 ம் வகுப்பிற்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS) நடைபெற உள்ளது.
இதற்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் பயிற்சியினை அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட அனைவரிடமும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS வினாத்தாளில் வினாவிற்கான விடையினை வட்டமிட்டு கொடுத்தால் அதனை வைத்து தேர்வு நடத்துபவர் OMR SHEET ல் பூர்த்தி செய்து கொள்வார்.
5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் விடையினை வட்டமிட்டு பின்னர் மாணவர்கள் தான் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.
எனவே இது சார்ந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கவும் SLAS வினாத்தாளில் அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும் மாணவர்களை பழக்கப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளில் 20 மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 30 மாணவர்களும் ( அனைத்து பிரிவுகளில் இருந்தும்) SLAS தேர்விற்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேற்கண்ட எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
மேற்கண்ட எண்ணிக்கைக்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் எந்த மாணவர்கள் SLAS தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதனை EMIS Server மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதனை தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளியின் EMIS தளத்தில் பதிவிறக்கி அந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
CONSOLIDATIONV SRIRAMGRADUATE MATHS TEACHER
PERAMBALUR DT
CELL : 7305518764
No comments:
Post a Comment