Tuesday, February 4, 2025

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கடமை உணர்வு நாள் நிகழ்வு 03-02-2025 அன்று மாநிலத் தலைவர் திரு. ம. கோ.திரிலோக சந்திரன் அவர்கள்  தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முனைவர் வெ.பரமசிவம் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். டி ஆர் பி சி சி இந்து  மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராமமோகன் அவர்கள்  முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்டம் வெண்மணம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஆ. இராஜா அவர்கள் சிறப்புரையாற்றினர். அவர் தமது உரையில,  சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரைப் பற்றிய அரிய கருத்துகளை எடுத்துரைத்ததோடு, ஆசிரியர்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் கூறினார். நிகழ்ச்சியைக் கோட்டப் பொறுப்பாளர் திரு. தி.நீலமேகன் அவர்கள் மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். இறுதியாக, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார். கூட்டத்தில் மாநில, கோட்ட, கல்வி மாவட்ட, மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.










No comments:

Post a Comment