இன்று 7.2.25 மாலை 5.30 மணிக்கு மேல் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு எந்த ஓய்வூதிய திட்டம் பயனுள்ளது என்பதை ஆராய்ந்து அரசுக்கு தெரிவிக்கும் வண்ணம் அரசு ஏற்படுத்தியுள்ள குழுவானது ஒன்பது மாத கால வரை செய்யப்பட்டுள்ளதை எதிர்த்தும் உடனடியாக இந்த குழுவை கலைத்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை தேர்தல் வாக்குறுதியான 309 அடிப்படையாகக் கொண்டு வழங்கிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய ஆசிரியர் சங்க மதுரை மாவட்டத்தின் சார்பாக 10 உறுப்பினர்களும் மாவட்ட செயலாளர் திரு கணேசன் மற்றும் மாவட்ட தலைவர் திரு சா.பரமசிவம் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் இந்த குழுவானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றம் வண்ணமாக உள்ளது என்றும் இந்த குழுவினால் எந்த ஒரு பயனும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment