Sunday, February 23, 2025

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று (23-02-2025) திண்டுக்கல்லில். GTN கலைக் கல்லூரி எதிர்ப்புறம் அமைந்துள்ள GS நகர் செல்வ விநாயகர் திருக்கோவிலில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக தேர்வு எழுதக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர் நலனுக்காகவும் ஆசிரியர்கள் நலனுக்காகவும். மேதா ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் திரு இளன் பருதி வரவேற்பு வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவர் டாக்டர். ராம்குமார் ,  பேராசிரியர் டாக்டர். ராமச்சந்திரன் ,சமூக ஆர்வலர் திரு. கோபாலகிருஷ்ணன் ,ஜெய்ஹிந்த் அகாடமி தலைவர் திரு. சந்தானம் ஆகியோர்  மாணவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான உணவு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார் .நிகழ்ச்சியை மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் ஏற்பாடு செய்தார் .













No comments:

Post a Comment