தேசிய ஆசிரியர் சங்கம் செங்கல்பட்டு மாவட்டம்
*******************************
30.01.2025வியாழன் மாலை 6.00 மணி அளவில் சென்னை- குரோம்பேட்டை ஸ்ரீ விஷ்ணு ஜோதிட வித்யாலயம் அரங்கத்தில் கடமை உணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் திரு. சி.பா.நாராயணன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்
திருமதி.வீ.கீதா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில தலைமை நிலைய செயலாளர் திரு.வினோத்குமார் அவர்கள் சங்கம் பற்றிய அறிமுக உரையும் அறிவுரையும் வழங்கினார். சமூக சேவகரும் கணக்கு தணிக்கையாளருமான திரு. ஸ்ரீகாந்த் அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போது பண்டைய கால குருகுல கல்வி முறை பற்றியும் தற்கால கல்விச் சூழலில் ஆசிரியர்களின் தலையாய கடமைகள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். மாவட்ட ஊடகத்துறை செயலாளர் திரு.இரமேஷ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
ஸ்ரீவிஷ்ணு ஜோதிட வித்யாலயத்தின் நிறுவனர் திரு.சக்ரபாணி் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.நன்றி
இப்படிக்கு
சி.பா.நாராயணன்
மாவட்ட தலைவர்
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு
செங்கல்பட்டு மாவட்டம்.
No comments:
Post a Comment