இன்று (17.01.25 ) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் கடமை உணர்வு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மருத்துவர் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். திருமதி மல்லிகா (பழனி க.மா.ம.அ.செயலாளர்) வரவேற்று சங்க அறிமுகம் செய்தார். திரு.மணிகண்டன் (மாவட்டப் பொருளாளர் ) சங்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார். மாநில இணைச் செயலாளர் திரு. இராகவன் அவர்கள் கடமை உணர்வு தின சிறப்புரையாற்றினார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் திரு. சேரன் செங்குட்டுவன் ,மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி.மல்லிகா திரு. தெய்வராஜ் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது. மாநில மகளிர் அணித் செயலாளர் திருமதி.சாருமதிதேவி சங்க சக்தி வளர்ப்பது குறித்து உரையாற்றினார். சுமார் இருபது நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment