இன்று (06.01.2025) மாலை மதுரை கள்ளர் சீரமைப்பு துறையில் EMIS வழியாக ஆசிரியர் கான கலந்தாய்வு நடத்த இசைவு தெரிவித்தமைக்காக இணை இயக்குனரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவிக்கும் பொருட்டு மாநில துணை தலைவர் திரு. விஜய் மாவட்ட தலைவர் திரு.பரமசிவம் மாவட்ட துணை தலைவர் திரு. விக்ரம பாண்டியன் மற்றும் மாவட்ட பொருளாளர் செயலாளர் சென்றபோது இணை இயக்குனர் இல்லாத காரணத்தினால் நேரடி உதவியாளர் திருமதி.உமா அவர் வசம் கோரிக்கை மனுக்களையும் நன்றியையும் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக தெரிவித்துக் கொண்டோம்.நமது கோரிக்கைகளை பொறுமையாக படித்து நியாயமான கோரிக்கைகளை முறையான வழியில் இணை இயக்குனர் வசம் எடுத்துக்கூறி கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதற்கான அனைத்து முயற்சிகளின் எடுப்பதாக உறுதி அளித்தார்கள்....
No comments:
Post a Comment