Wednesday, January 22, 2025

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று மதுரை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக இன்று (22.01.2025) புதன் கடமையுணர்வு தினம் நிகழ்வு மதுரை தெப்பகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. நிகழ்வு குத்து விளக்கு ஏற்றி சரஸ்வதி வந்தனத்துடன் தொடங்கியது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியின் தமிழாசிரியை திருமதி. சிவா வரவேற்க, வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் நூலகர் / மாணவர் விடுதிக் தலைமை காப்பாளர், யோகா கலைஞர் திரு. கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. இந்து மதி  அவர்களின் தலைமை உரையுடன் துவங்கியது. மதுரை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரு.சா.பரமசிவம் வாழ்த்துரையாற்ற சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்ற நிகழ்வு மிக சிறப்பாக அமைந்ததுஅனைவரும்  குடும்பத்திற்கான கடமை கல்விக்கான கடமை, தேசத்திற்கான கடமை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர். நிகழ்வில் பள்ளியளவில் சிறந்து விளங்கிய மாணவியர்களுக்கும் பள்ளிக்கும் அமைப்பின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு.கணேசன் நன்றியுரை கூற நாட்டு பண்ணுடன் நிகழ்வு நிறைவுப் பெற்றது. நிகழ்வு சிறப்பாக நடைப்பெற மாவட்ட பொருளாளர் திரு. ஆறுமுக கடவுள் கல்வி மாவட்டப் பொருளார் உதவிய மட்டுமின்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளியில் அனைத்து ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை வழிகாட்டுதலுடன் தமிழாசிரியை திருமதி சிவா மற்றும் ஏனைய ஆசிரியைகள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் 20 ஆசிரியர்கள் 30 மாணவிகள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.















No comments:

Post a Comment