CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம்
(தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள கூட்டமைப்பு)
24.10.24 உண்ணாவிரதம் ஏன் பங்கேற்ற வேண்டும் ?
மத்திய அரசு மற்றும் தமிழகம் தவிர்த்த இதர மாநில அரசுகள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி ஒய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன்
( PFRDA) 2004 முதல் ஒப்பந்தம் போட்டுள்ளது
தமிழக அரசு 21 வருடங்களாக ஒய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை
.________________________
புதிய ஓய்வூதிய திட்டம் படி PFRDA வுடன் ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சேமிப்பு தொகைக்கு ஏற்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் 2016 ம் ஆண்டு வரை பிடித்த பணம் கூட வழங்கவில்லை
2016 ல் தமிழகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் 2016 பிப்ரவரி மாதம் முதல் one time settlement வழங்கப்பட்டு வருகிறது
ஆனால் 21 ஆண்டுகளாக
ஓய்வூதியம் வழங்கப்படவில்லை
__________________________
PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் குடும்பங்களுக்கு 20 ஆண்டுகளாக பணி கொடை வழங்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 21 ஆண்டுகளாக
பணி கொடை வழங்கப்படவில்லை
___________________________
PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மரணமடைந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மரனமடைந்தால் குடும்பத்தினருக்கு 21 ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை
___________________________
PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய அரசு மற்றும் மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் செலுத்திய பங்கீடு தொகையில் இருந்து 25% கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தில் இருந்து இன்று வரை முன்பணம் வழங்கப்படவில்லை
___________________________
1.1 2004 க்கு முன்பு தினக்கூலி தொகுப்பூதியம்
மதிப்பூதியத்தில் பணிபுரிந்து 1.1.2004 க்கு பின்பு கால முறை ஊதியத்தில் ஈர்க்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பு
PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அரசு ஊழியர்களுக்கு *பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தப்பட்டுள்ளது*
.
தமிழகத்தில் 1.4.2003 க்கு முன்னர் தினக்கூலி தொகுப்பூதியம் மதிப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் கால முறை ஊதியததிற்கு ஈர்க்கப்பட்டவர்கள் ( காவலர்கள் செவிலியர்கள் நூலகர்கள் ) உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .
பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு அமுல்படுத்த மறுத்து வருகிறது
மேலும் காவலர்கள் வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது
இன்று வரை தமிழகத்தில் அமுல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது
__________________________
PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் 10% அரசு பங்கீடாகவும் 10 % அரசு ஊழியர் பங்கீடாக செலுத்தப்பட்டது
1.4.2019 முதல் அரசின் பங்கீடு 10% லிருந்து 14% ஆக உயர்ந்தப்பட்டது
1.4.25 முதல் அரசின் பங்கீடு 18% ஆக உயர்ந்தப்பட உள்ளது
அரசு ஊழியர் பங்கீடு 10% ஆக உள்ளது
ஆனால் தமிழகத்தில் 2003 முதல் இன்று வரை அரசின் பங்கீடு 10% ஆக தான் உள்ளது
அரசின் பங்கீடு 14% ஆக உயர்ந்தப்பட வில்லை
___________________________
கடந்த 20 ஆண்டாக புதிய ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புகள் தமிழகத்தில் அமுல்படுத்தப்படவில்லை
புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகள் ஒரே நாடாகவும்
தமிழக அரசு தனி தீவாகவும் உள்ளது
தற்போது மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாமல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது
கடந்த 20 ஆண்டுகளாக புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்களுக்கு எவ்வித பலனும் இல்லாதது போன்று தான்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது
தமிழக அரசு ஊழியர்கள் தனி தீவாக உள்ளோம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து
24ம் தேதி உண்ணாவிரதத்தில்
பங்கேற்பீர்
__________________________
No comments:
Post a Comment