இன்று தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு அமைப்பின் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக குரு வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில். நிகழ்வு மாவட்டத் தலைவர் திருமதி வைரமணி அவர்கள் வரவேற்புரை நல்கினார். மதுரை மாவட்ட தலைவர் திரு. பரமசிவம் அவர்கள் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. சாருமதி தேவி .மாநிலத் துணைத் தலைவர் திரு.பா. விஜய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமை உரையை வாசவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள்முதல்வர் திரு.மோகன்ராம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் திரு ஆறுமுகம் மற்றும் மாவட்ட ஊடக செயலாளர் திரு அழகேஷ்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்களாய் இருந்து தற்சமயம் ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களான திரு. ராஜபாண்டியன் .திருமதி. தேவி ஜான்சிராணி .திரு. சேரன் செங்குட்டுவன் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. மோகன்ராம் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டன. மற்றும் பசுமைத் தமிழகம்திட்டம் துவங்கப்பட்டது.
No comments:
Post a Comment