Sunday, July 21, 2024

குரு பூர்ணிமா - சிறப்பு கட்டுரை !!!

 குரு பூர்ணிமாஆடி மாதத்தில் வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை வியாசபூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.

வேத வியாசரின் சிறப்புகள் சில :

1.இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என அழைக்கப்பெறுகிறார்.

2. பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.

3.வியாசர் இதிகாசமான மகாபாரதத்தினை எழுதியபின், பதிணென் புராணங்களை எழுதியதாக கூறப்படுகிறது. 

4. வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.

5.உபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் 555 சூத்திரங்கள் கொண்ட பிரம்ம சூத்திரம் நூலை இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.




No comments:

Post a Comment