Sunday, June 30, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்

 19.06.2024 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத்தலைவர் திரு வினோத் அவர்களுக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு அவர்கள் இல்லத்தில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது .


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில இணைச் செயலாளர் திரு.கதிர்வேல் , மாவட்டத் தலைவர் திரு. ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம், மாவட்ட பொருளாளர் திரு கோவிந்தன், மாவட்ட சேவை பிரிவு செயலாளர் திரு சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் திரு வினோத் மற்றும் திருமதி சங்கீதா உள்ளிட்டோர் இன்றைய மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


மாவட்டச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


*1. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் திரு. கோவிந்தன் அவர்கள் மாவட்ட பொருளாளராக ஒரு மனதாக நியமிக்கப்பட்டார்*


2. நீதியரசர் திரு சந்துரு அவர்களின் குழுவின் அறிக்கையில் ஒரு தலைப்பட்சமாக ஹிந்து மத அடையாளங்களை மட்டும் அழிக்கும் விதத்தில் உள்ள அனைத்தையும் கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

3. அந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஜீரோ கவுன்சிலிங் என்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் உள்ள வகையில் உள்ளதால் இதையும் கைவிட வேண்டும்.

4. மேலும் திரு சந்துரு அவர்களுக்கு குழுவின் அறிக்கையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பழைய முறையில் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்பதையும் கைவிட வேண்டும்


மேலே உள்ள பல விஷயங்கள் ஆசிரியர்களின் நலனுக்கு எதிராக உள்ளதால் நீதியரசர் திரு. சந்துரு அவர்களின் குழு அறிக்கையை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்


தேசிய ஆசிரியர் சங்கம் 

தமிழ்நாடு 

கள்ளக்குறிச்சி மாவட்டம்





No comments:

Post a Comment