ஸ்ரீதேவி மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தின் நடு நாயகமாக உள்ளது. துரோகிகளின் சூழ்ச்சிகளால் அரசனாகிய சுரதனும், சமாதி என்னும் வியாபாரி ஒருவனும் வஞ்சிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நாட்டையும் வீட்டையும் துறந்து நிம்மதி தேடி அலைந்தனர். ஒரு காட்டில் சந்தித்துக் கொண்ட இருவரும் அங்கு வசித்த ஒரு முனிவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.
உலகியலில் சிக்கி அதிலிருந்து விடுபட நினைக்கும் முடுச்சுகளுக்கு சாது சங்கமே சிறந்த மருந்து என்பதை போதிக்கும் விதமாக ஸ்ரீ தேவி மஹாத்மியம் விளங்குகிறது.
உலகியலில் பற்றுடைய மனிதனுக்கும் விலங்குகளுக்கும் எந்த வேறுபாடு இல்லை என்று கூறும் அந்த முனிவர் வைராக்கியத்தை போதிக்கிறார்.
பின்னர் தேவியை நியமத்துடன் வழிபடுவதன் மூலமும் தேவியின் வரலாறுகளை பக்தியுடன் படிப்பதன் மூலமும் அவளுடைய அருளை பெற்று இக பர சுகங்களை பெறலாம் என்று போதிக்கின்றார்.
தேவியின் வரலாற்றை அறிய அந்த இருவரும் விரும்புகின்றனர். அவர்களுக்கு அந்த முனிவர் கூறியது ஸ்ரீதேவி மஹாத்மியம்.
மகிஷாசுரன், தும்பரன்,லோசனன், ரத்த பீஜன், சன்டன், முண்டன் சும்பன் நிசும்பன் முதலிய அரக்கர்களால் பிடிக்கப்பட்ட தேவர்கள் தேவியை துதித்து தங்களை காக்கும் படி வேண்டினர்.
எனவே தேவி அவ்அரக்கர்களை அழித்து தேவர்களை காக்கின்றாள். அரக்கர்களை நமது மனதில் தோன்றும் காமம் குரோதம் முதலிய தீய எண்ணங்களாகக் கொன்டால் அவற்றை தேவியின் அருளால் மட்டுமே அளிக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது.
மூன்று வருடங்கள் சுரதனும்,சமாதியும் முனிவர் போதித்தபடி நியமங்களுடன் ஸ்ரீதேவி மகாத்மாயத்தை ஜெபித்து வழிபட்டனர் அதனால் மகிழ்ந்த தேவி அவர்களது விருப்பத்திற்கு ஏற்ற வரங்களை வழங்கினார்.
ஸ்ரீ தேவி மஹாத்மியத்தை நியமத்துடன் படிப்பவர்கள் அனைவருக்கும் தேவியின் அருள் நிச்சயமாக இருக்கும். எந்த பழமையும் எதிர்பார்க்காமல் படிப்பவர்களுக்கு சித்த சுத்தியும் தேவியின் திருவடிகளில் பக்தியும் ஏற்படும். தேவியின் அருளால் மோட்சமும் சித்திக்கும்.
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே !
ஸரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே !!
- ஶ்ரீதேவி மஹாத்மியம் 11.10
No comments:
Post a Comment