12.11.2023 தீபாவளி திருநாளை முன்னிட்டு நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என 160 பேருக்கு பழங்கள் , பிஸ்கட் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களும் பழங்கள், பிஸ்கட் வழங்கினோம். சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறியதும் நோயாளிகள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியினை விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. குணவதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment